நடிகர் ஶ்ரீ-க்கு என்ன ஆச்சு?ஆடை இல்லாமால் வீடியோ பாலின மாற்று சிகிச்சையா? : Sri Bluetick

நடிகர் ஶ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடைகள் இல்லாமல் வீடியோ வெளிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் வழியாக கவனமீர்த்தவர் நடிகர் ஶ்ரீ. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் , இறுக பற்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீ அந்த நிகழ்ச்சியை விட்டு நான்கு நாட்களில் வெளியேறினார்.

ஒரு நல்ல நடிகர் என அடையாளம் பெற்று வந்த நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.  இன்ஸ்டாகிராமில் ஶ்ரீ ப்ளூ டிக் என்கிற ஐடியில் நீண்ட கலர் அடித்த தலைமுடிகளை வைத்தபடி ஶ்ரீயின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஆடைகள் இல்லாமல் பல வீடியோக்களை வெளியிட்டு ஶ்ரீ சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கான ப்ரோமோஷனா அல்லது அவர் போதைப் பொருட்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கிறார் என்கிற பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தனது பதிவுகளில் ஶ்ரீ தாய்லாந்த் லேடிபாய்களை குறிப்பிடுகிறார். ஶ்ரீ பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது

ஶ்ரீயின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் புரியாத விதமாக பல பதிவுகளை எழுதியுள்ளார். 37 வருடங்களாக தன்னைத் தானே ஏமாற்றி வந்துள்ளதாக ஶ்ரீ தனது பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். கர்மா காரணமா , சுதந்திரன் காரணமா , காசு காரணமா என்று விவாதிக்கும் குள்ள கள்ளன்கள் என அவர் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் பல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தும் ஶ்ரீக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போராடி வருகிறார். மேலும் அவர் இறுதியாக நடித்த படத்தில் அவருக்கு சம்பளம் தரப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola