Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், நேற்று திடீரென நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் கொடுத்துள்ளதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த வாரம் தன்னுடைய மனைவியுடனான விவாகரத்து குறித்து அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்த சம்பவம், கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி ஆகியோரின் விவாகரத்து சம்பவங்களால் இது என்ன தமிழ் சினிமா உலகில் தொடர் விவாகரத்து நடந்து வருகிறதே என்று அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்து இருப்பவர்கள் தான் ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடி.

கடந்த மாதத்திலிருந்தே ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடி பிரிந்து வாழ்வதாக தகவல் வந்தாலும் 15 வருட திருமண வாழ்க்கை, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜெயம் ரவி அந்த முடிவை எடுக்க மாட்டார் என்று சொல்லி வந்தனர் அவரின் ரசிகர்கள், ஆனால் திடிரென ஜெயம் ரவி அறிவித்தது. அதற்கு தன்னிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆர்த்தி சொன்னது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் பாடகி கேனிஷாவுடன் ஜெயம் ரவியை தொடர்பு படுத்தியும் பலர் பேசி வந்தனர்.

இந்நிலையில் ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம், பொய்.. வாழு வாழ விடு, கெனிஷா கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர், அவர் ஒரு ஹீலர் அவர் குறித்து தவறாக பேச வேண்டாம் என்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது அனைத்தும் ஒரு பக்கம் இருக்க தற்போது ஜெயம் ரவியை அவருடைய வீட்டிற்கும் விடாமல் ஆர்த்தி தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது ஜெயம் ரவி, தன்னுடைய மனைவி, மற்றும் மகன்களுடன் நீலாங்கரையில் உள்ள பங்களாவில் வாழ்ந்து வந்த நிலையில்... ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பிய ஜெயம் ரவி, தன்னுடைய வீட்டிற்கு சென்றபோது உள்ளே விடாமல் ஆர்த்தி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இதுகுறித்து ஜெயம் ரவி சென்னை நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் மனைவி ஆர்த்தியின் பெயரில் புகார் அளித்ததாகவும், தன்னுடைய கார், மற்றும் உடமைகள் அனைத்தையும் ஆர்த்தி பறித்து கொண்டார். அவற்றை மீட்டு தருமாறு புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் இது குறித்து போலீசார் ஆர்த்தியிடம் பேசியபோது இது அவருடைய வீடு அவர் எப்போது வேண்டும்மானாலும் வரலாம் என கூறியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன... ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதி மன்றம் வரை சென்றுள்ளதால், சட்ட ரீதியாக ஆர்த்தியை அணுகும் முயற்சியில் ஒரு படி தான் இது என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola