Ukraine Russia Conflict: கை கொடுத்த டாட்டா..உக்ரைன் விரையும் ஏர் இந்தியா விமானங்கள்

Ukraine Russia Conflict: கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் உண்டாகும் சூழல் நீடித்து வருகிறது. இதன்காரணமாக அந்த நாட்டில் இருக்கும் பிற நாட்டவர்களை வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில் உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியா தூதரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர டாட்டாவின் ஏர் இந்திய நிறுவனம் சிறப்பு விமானங்களை அனுப்ப உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola