Salem Corporation Election Results: EPS இன் எஃகு கோட்டையை உருக்கிய திமுக!கே.என்.நேரு செய்த சம்பவம்!
Salem Corporation Election Results: கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாதநிலையில், கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேருவையும் பொறுப்பாளர்களாக நியமித்தது திமுக தலைமை, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சேலம் மாவட்டம் என்பது திமுகவின் கோட்டையாக இருந்து வந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு சேலம் மாவட்டம் அதிமுக வசம் சென்றது. திமுகவின் சேலம் மாவட்ட முகமாக இருந்த வீரபாண்டி அறுமுகம் மறைவுக்கு பிறகு சேலம் மாவட்ட திமுக கோஷ்டிகளால் பிளவு பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக அமைச்சர் நேரு நியமிக்கப்பட்டதற்கு பின் நடந்த முதல் கூட்டத்தில் "சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை உடைத்து, திமுக கோட்டையாக மாற்றுவோம். நான் வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை, உங்களுக்குத் தெரிந்த அத்தனை வேலைகளும் எங்களுக்கும் தெரியும்" என்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.