Thirunelveli Corporation Election 2022 Results: குலுக்கலில் வென்ற பாஜக!பாரத் மாதாகீ ஜே முழக்கம்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppThirunelveli Corporation Election 2022 Results: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை பணகுடி பேரூராட்சியின் 4ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் மனுவேல் மற்றும் அதிமுக வேட்பாளர் உஷா ஆகியோர் 266 வாக்குகள் பெற்று இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.