Suresh Gopi : கேரளாவில் மலர்ந்த தாமரை வாகைசூடிய சுரேஷ் கோபி குஷியில் பாஜக
கேரள அரசியல் வரலாற்றில் திரிசூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றால்? முதல் முறையாக பாஜக கேரளாவில் கால் பதித்த பெருமையை பெரும்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளாவில் திரிச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎஃப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில், திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. திருச்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளீதரனை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, முதல் சுற்றில் இருந்தே தெளிவான முன்னிலை பெற்றிருந்தார், மதியம் 12.30 மணிக்குள் 65,000 வாக்குகளை கடந்தார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் சுரேஷ் கோபிக்கு இருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவரான இவர், குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி, இதுவரை சுமார் 250 படங்கள் வரை நடித்துள்ளார்.
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘தீனா’ படத்தில், நடிகர் அஜித்துக்கு அண்ணனாக சுரேஷ் கோபி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் சரத்குமாருடன் சமஸ்தானம் , விக்ரம் நடித்த ஐ, விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் ஆகிய படங்களில் நடித்தார். நடிக
ராக மட்டுமில்லாமல் பாடகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் சுரேஷ் கோபி. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜ்ய சபா எம்.பி ஆக கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் சுரேஷ் கோபி.
சுரேஷ் கோபி வெற்றி பெற்றால்? கேரளத்தில் பா.ஜ.க வென்ற முதல் தொகுதியாக அது இருக்கும்.