Subramanian Swamy Slams Modi : மானம் இருக்கா? கழுத்தை பிடிச்சு தள்ளணுமா? சு. சுவாமி ஆவேசம்
மானம் இருக்கா? கழுத்தை பிடிச்சு தள்ளணுமா? சு. சுவாமி ஆவேசம்
சுயமரியாதை உள்ள எந்த தலைவரும் உடனடியாக ராஜினாமா செய்து விடுவார்.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை காத்திருக்க மாட்டான் என பிரதமர் மோடியை சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மாபெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. தனிப்பெரும்பானமையை கூட பிடிக்க முடியாமல் தற்போது ஆட்சி அமைக்க பாஜக தள்ளாடி வருகிறது.
மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பில் தொடங்கி பிரச்சாரம் முடியும் வரையில் பாஜக தன் மீது அலாதி நம்பிக்கை வைத்திருந்தது. 400 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரம்மாண்டமாக ஆட்சி அமைப்போம் என பிரதமர் மோடியும் கூறி வந்தார். ஏன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் கூட பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்ற போக்கிலே வெளியானது. எனினும் காங்கிரஸார் நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
ஆனால் தேர்தல் முடிவுகளோ மோடிக்கு பெரும் இடியாகவும் காங்கிரஸுக்கு தைரியத்தை அளிக்கும் வகையிலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக 13 மத்திய அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
தனிப்பெரும்பான்மையை கூட பிடிக்கமுடியாமல் பாஜக வெறும் 240 தொகுதிகளில் மற்றுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவர் பெரிதாக நம்பியிருந்த ராமர் கோவில் அரசியல் இந்தியா மக்கள் மத்தியில் மட்டுமில்லை ஏன் அயோத்தி மக்கள் மத்தியில் கூட எடுபடவில்லை. ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைஷாபாத் தொகுதியில் பாஜக தோல்வியுற்றது. உத்தர பிரதேசத்திலும் பாஜக கை தாழ்ந்துள்ளது மோடிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றியை கூட அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்தில் திகைத்துள்ளார் பிரதமர் மோடி.
இன்று டெல்லியில் எண்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையின் முடிவில் ஆட்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மூத்த பாஜக தலைவரும் மோடியின் தீவிர எத்ர்ப்பாளருமான சுப்ரமணிய சுவாமி மோடியை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி கூறியுள்ளார். மேலும் அவரை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தனது தலைமையிலான பாஜக வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை கூட பிடிக்க முடியாமல் உள்ள நிலையில் நரேந்திர மோடி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
சுயமரியாதை உள்ள எந்த தலைவனும் உடனடியாக ராஜினாமா செய்து விடுவார்.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை காத்திருக்க மாட்டான் என சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.