Sowmiya Anbumani Ramadoss : ”தருமபுரியும் என்னையும் பிரிக்க முடியாது..!” செளமியா அன்புமணி உருக்கம்
வாக்காளர்களுக்கு நன்றி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி மக்களுக்காக இன்னும் உழைப்பேன் சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் ஆ மணிஅவர்களிடம் 21300 வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வி அடைந்தார்.
இதனை அடுத்து செட்டிகரையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய சௌமிய அன்புமணி தேர்தல் முடிவுகள் தெரிந்துள்ளது வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கின்றோம். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு அளித்த மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர். பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஆ மணி அவர்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தோல்வியில் இருந்து மக்களுக்கு இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறது. தர்மபுரி தொகுதியில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்திருந்தால் நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்திருப்பேன். தர்மபுரி மக்களுக்காக எனது உழைப்பு என்றும் இருக்கும்.
தர்மபுரியை நான் தாய் வீடாகத்தான் பார்க்கிறேன். வெற்றி பெற்றவர்கள் எத்தனையோ வாக்குறுதிகளை அளித்து இருந்தார்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அதுதான் நியாயம் தர்மபுரி தொகுதிக்கு தண்ணி கொண்டு வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் தண்ணியை தருமபுரி மக்களுக்கு கொண்டு வர வேண்டும் குடிக்க விவசாயத்திற்கு தண்ணீர் தேவை அதனை அவர்கள் கொண்டு வர வேண்டும் மேடைக்கு மேடை வாக்குறுதிகளை சொல்லிவிட்டு சென்றார்கள் கொண்டு வரட்டும்.