Punjab Elevction Result 2022: பஞ்சாப்பில் மண்ணை கவ்வும் சன்னி, சித்து!

Punjab Elevction Result 2022: பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 117 இடங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 59 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்களின் குரல் என்பது கடவுளின் குரல். மக்களின் முடிவை நான் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola