Lok Sabha Election 2024 :அலறவிட்ட I.N.D.I.A..பதற்றத்தில் மோடி!கெத்து காட்டும் நிதீஷ்

Continues below advertisement

மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க தற்போது சாதகமான சூழல் இல்லாத நிலையில், சந்திர சேகர ராவிற்கும், நிதீஷ் குமாருக்கும் பாஜக தலைமை அவசர போன்கால் செய்துள்ளது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

மக்களவை தேர்தல் முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது..288 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

 

இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.

 

இதனால் தற்போது சந்திர சேகர ராவ் மற்றும் நிதீஷ் குமாரின் உதவி பாஜகவுக்கு தேவை,

உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.ஆனால் மோடி மீது அதிருப்தியில் உள்ளவர்கள். இவர்கள் மோடி பிரதமராவதை எதிர்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

 

இதுமட்டுமின்றி இவர்கள் எண்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி ஐஎண்டிஐஏ கூட்டணியில் இணைந்து கூட ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.ஏன் நிதிஷ் அல்லது சந்திர பாபு நாயுடு பிரதமராக முன்னிறுத்தப்பட்டு இந்தியா கூட்டணி கூட ஆட்சி அமைக்கலாம்.

 

இவ்வாறான சூழலில் தற்போது நிதீஷ் மற்றும் சந்திரபாபுவுக்கு கடும் டிமாண்ட் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக இருவரும் இவர்களை தொடர்புகொண்டு ஆஃபர்களை அள்ளி வீசி வருவதாக கூறப்படுகிரது.
ஐஎண்டிஐஏ கூட்டணியில் நிதீஷுக்கு துணை பிரதமர் பதவி தருவதாக ஆஃபர் கொடுத்துள்ளனராம்.

 

ஆக இதே நிலை  நீடித்தால் நிதீஷ் மற்றும் சந்திரபாபுவின் முடிவில்  தான் நாடாளும் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கப்படும்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram