Lok sabha election 2024 : அதிமுக,பாஜகவுக்கு தண்ணி காட்டிய சீமான்.. கொண்டாட்டத்தில் தம்பிகள்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து மும்முனை போட்டி நிலவிய நிலையில், தனித்து தேர்தல் களம் கண்ட நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம் மும்முணை போட்டி இல்லை நான்கு முணை என்று நாம் தமிழர் கட்சி கெத்து காட்டியுள்ளது.
நாடுமுழுவதும் இன்று காலை 8 மணிமுதல் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான, தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், பாஜக கிட்டத்தட்ட 290 தொகுதிகளிலும், காங்கிரஸ் 235 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 40 தொகுதிகளிலும், முன்னிலையில் உள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக எப்போதும் போல தனித்து தேர்தல் களம் கண்டது. சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி இதுவரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிடுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படும் நிலையில், அதனை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற நாம் தமிழர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தற்போதிய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்திலும் பெரும்பான்மையான இடங்களில் 4வது இடத்திலும் இருக்கிறது. ஒரு தொகுதியிலும் வெற்றி நிலவரம் காணப்படாவிட்டாலும், வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.