Cuddalore Mayor Election Issue: கிடைக்காத மேயர்! துக்கத்தில் தூக்கமாத்திரை! கடலூர் சோகம்!

Continues below advertisement

Cuddalore Mayor Election Issue: மறைமுக தேர்தலில் 45 கவுன்சிலர்களில், 32 பேர் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதிமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்க மறைமுக தேர்தலுக்கு வராமல் புறக்கணித்தனர். மேலும் திமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்ததால் வாக்களிப்பில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து நடைபெற்ற மேயர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில், திமுக தலைமை தேர்வு செய்த வேட்பாளர் சுந்தரிக்கு 19 பேர் வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு திமுக கவுன்சிலர் கீதா குணசேகரனுக்கு ஆதரவாக 12 பேர் வாக்களித்தனர். இதையடுத்து 19 வாக்குகள் அதிக பெற்ற திமுக வேட்பாளர் சுந்தரி ராஜா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில், கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக சுந்தரி ராஜா தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram