Chandrasekhar Rao Lok sabha election 2024 : பரிதாப நிலையில் BRS! சந்திரசேகர ராவ் படுதோல்வி? பரபரக்கும் தெலங்கானா

Continues below advertisement

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரதி ராஷ்ட்ரிய சமிதி கட்சி பின்தங்கி உள்ளது அவர்களின் தோல்வி ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

தென்னிந்தியாவின் மிகவும் முக்கிய மாநிலமாக விளங்கும் தெலங்கானா மாநிலம் உருவானது மதலே அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தது பாரத் ராஷ்ட்ரிய சமிதி. மேலும் தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகர் ராவ்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்தார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தனது கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றியது முதலே சந்திரசேகர் ராவிற்கு பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது.


நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த முறை மீண்டு வரலாம் என்று கருதிய சந்திரசேகர் ராவிற்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த  சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லாமல் இருப்பது, இந்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் படுதோல்வி அடைந்திருப்பது பி.ஆர்.எஸ். கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் மகபுதாபாத், தம்மம் ஆகிய 2 தொகுதியில் மட்டுமே இரண்டாவது இடத்தில் பி.ஆர்.எஸ். கட்சி உள்ளது. மற்ற இடத்தில் எல்லாம் 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது பிஎஸார் ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram