BJP Lost in Ayodhya : தோற்றது ராமர் கோவில் அரசியல் அயோத்தியில் வீழ்ந்தது பாஜக பறக்கும் அகிலேஷ் கொடி!

Continues below advertisement

உத்திரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக வெற்றிப்பெறும் என ஒட்டு மொத்த பாஜக கூட்டணியும் எதிர்பார்த்த நிலையில்,  47 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையுடன் சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றி முகமில் உள்ளார். இது பாஜகவினர் மத்தியில்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாடுமுழுவதும் இன்று காலை 8 மணிமுதல் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான, தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இதில், பாஜக கிட்டத்தட்ட 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் 230 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 40 தொகுதிகளிலும், முன்னிலையில் உள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் பிரான பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரியில் மாதம் வெகு விமர்சியாக நடைபெற்றது. மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ராமர் கோயில் கனவு நிறைவேறியதால் பாஜகவிற்கு ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது நாடலுமன்ற தேர்தலில் வாக்குகளாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில், உத்திரப்பிரதேசத்தில் முக்கால் வாசிக்கும் மேலான தொகுதியில் பாஜக தோல்வியையே சந்தித்துள்ளது.

குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக வெற்றிப்பெறும் என ஒட்டு மொத்த பாஜக கூட்டணியும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர்மாறாக அங்கு சமாஜ்வாதி கட்சி வெற்றி முகமில் உள்ளது. பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையுடன் சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் அயோத்தி ராமர் கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் வெற்றி முகமில் உள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram