BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!
தூத்துக்குடியில் ’’அண்ணாமலை தோத்தா மொட்டை அடிச்சிக்கிறேன் டா’’ என சபதமிட்டு பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி சொன்னபடி மொட்டையடித்துகொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக பதவி வகித்து வருபவர் ஜெயசங்கர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்படி வெற்றி பெறவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என மாற்று கட்சி நண்பர்கள் கேட்ட பொழுது நிச்சயம் வெற்றி பெறுவார். அப்படி இல்லையென்றால் பரமண்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை அடித்து கொண்டு பஜார் பகுதியில் வலம் வருகிறேன் என பந்தயம் செய்துள்ளார் .
இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார் .
இதனையடுத்து மாற்று கட்சி நண்பர்களிடம் செய்த பந்தயதிற்காக பர்மனகுறிச்சி பஜாரில் வைத்து ஜெயசங்கர் மொட்டை அடித்து கொண்டு பஜாரை வலம் வந்தார். பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜெயசங்கர் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி பெற்தையடுத்து மொட்டை அடித்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...