Annamalai become MP? : மத்திய அமைச்சர் அ.மலை?பறிபோகிறதா மாநில பதவி?அதிரடி காட்டும் மோடி

Continues below advertisement

பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி தர டெல்லி பாஜக தலைமை பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..

அண்மையில் வெளியான மக்களவை தேர்தல் முடிவில், தமிழ்நாட்டில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து, NDA கூட்டணி கட்சிகளும் இங்கே தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தோல்விக்கு அதிமுக, பாஜக கூட்டணி முறிவு தான் காரணம் என்று பாஜக தலைவர்கள் சிலர் பொருமி வருகின்றனர். மேலும் கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலையின் செயல்பாடு தான் காரணம் என ஏற்கனவே அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிவந்தன.

இப்படி பட்ட சூழலில் தான் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவை பதவி தரப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி தலைமை எடுத்துள்ள அமைச்சரவை லிஸ்டில் அண்ணாமலையின் பெயர் இருப்பதாகவும், இது குறித்து பரிசீலனை நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

பாஜகவை பொறுத்தவரை ஒரு நபர் ஒரு பதவியில் தான் நீடிக்கலாம் என்ற விதி இருக்கிறது. அப்படி பார்த்தால் மத்திய அமைச்சர் ஆகும் பட்சத்தில் அண்ணாமலை தன்னுடைய மாநில பதவியிலிருந்து விடுவிக்கபடுவார். இல்லை தேர்தல் தோல்விக்கு நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அண்ணமலையின் பதவி பறிக்கபட்டாலும், நிச்சயம் ஏதேனும் ஒரு முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

காரணம் தமிழக பாஜகவின் கடந்த கால வரலாற்றை பொறுத்த அளவில் இதற்கு முன்னதாக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் பதவி விலகியுதும், அவருக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கபட்டது. அதே போன்று மாநில தலைவராக இருந்த எல் முருகன் விலகியபோதும், அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் எப்படியும் அண்ணாமலை விலகினால் அவருக்கு எப்படியும் முக்கியமான பொறுப்பு வழங்ககப்படும் என்கின்றனர் பாஜகவினர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram