Annamalai : சவால் விட்ட அ.மலை பிரியாணி போட்ட திமுகவினர் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Continues below advertisement

பாஜக எதிர்பார்த்ததைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெறும், திமுக டெபாசிட் கூட பெறாது என செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அண்ணாமலையை சமூக வலைதளங்களில் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

நாடுமுழுவதும் இன்று காலை 8 மணிமுதல் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான, தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இதில், பாஜக கிட்டத்தட்ட 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் 230 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 39 இடங்களிலும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளனர். 

பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என மேலிடம் அறிவித்திருந்தது. அதன்பிறகு, வேட்பாளராக களமிறங்கி தீவிர வாக்கு வேட்டையில் வேங்கையாக செயல்பட்டார். பாஜக எதிர்பார்த்ததைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெறும், திமுக டெபாசிட் கூட பெறாது என செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். தொடர்ந்து, ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் நேரடியாக பேசிய அண்ணாமலை, அதிக சதவீதத்தில் வெற்றிபெறுவேன் இது சவால். அப்படி இல்லையென்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன். தொடர்ந்து, சில இடங்களில் குறி வைத்துள்ளோம். இது மிஸ் ஆகாது. தேர்தலுக்கு பின் தென்மாவட்டங்களில் திராவிட கட்சி எம்.பி.க்களே இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் பேசினார்.

இந்தநிலையில், கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதையடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அண்ணாமலையை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram