Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?

Continues below advertisement

இந்திய குடியுரிமை பெற்ற பிறகு, நடிகர் அக்ஷய் குமார் முதல்முறையாக வாக்களித்துள்ளார்.

அக்ஷய் குமார் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகளாக கனடா குடியிரிமை வைத்திருந்தது விமர்சனத்தில் சிக்கியது. அவர் இந்தியா தொடர்பாக எந்த கருத்து தெரிவித்தாலும் கனடா குடியுரிமை சர்ச்சை அவரை வலம் வந்தது. இறுதியில் கனடா குடியுரிமையை துறந்த அக்ஷய் குமார், கடந்த ஆண்டு இந்திய குடியுரிமையை பெற்றார். இந்தியா தான் எனக்கு எல்லாமாக இருக்கிறது. இந்தியா மீதான அன்பை நிரூபிக்கும் வகையில் கனடா குடியுரிமை நான் துறப்பதாக கூறியிருந்தார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திர தினத்தன்று இந்திய குடியுரிமை வாங்கியுள்ளதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்திய குடியுரிமை கிடைத்த பிறகு 56 வயதான அக்ஷய் குமார் மக்களவை தேர்தலில் முதல்முறையாக வாக்களித்துள்ளார். 5ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்தது. மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர். 

மும்பையில் தனது வாக்கினை செலுத்திய அக்ஷய் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இந்தியா வளர்ச்சியடையவும், வலுவானதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அதனை கவனத்தில் கொண்டு வாக்களித்தேன். மக்கள் தங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram