Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

Continues below advertisement

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பிர்மிங்காம் அகாடமியுடன் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் முதலாம் ஆண்டு பயிற்சியாக (Diploma in Hospitality Managment)ஐ மாணவர்களுக்கு வழங்கவிருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக, 40000 சதுர அடி பரப்பளவில் லேப் வசதியுடன் உள்ள சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வளாகத்தில் நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு Rs.8000 முதல் Rs.15000  சம்பளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் ஆண்டில் சிங்கப்பூரில் பிர்மிங்காம் அகாடமியில் Advanced Diploma in Hospitality Management படிப்பு வழங்கப்படும். இந்த கட்டத்தில் ஆறு மாத கல்விப் படிப்பையும், ஆறு மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சியையும் பெறுவார்கள். இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவார்கள்.

மேம்பட்ட டிப்ளமோ முடித்தவுடன், மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் (De Montfort University) அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் உலகில் இரண்டாவது சிறந்த தரவரிசையில் உள்ள சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூலில்  (The Swiss Hotel Management School,) பட்டப்படிப்பைத் (Degree) தொடர விருப்பம் தெரிவிக்கலாம்.  UKஇல், மாணவர்கள் வாரத்திற்கு 20 மணிநேரம் வரை வேலை செய்யலாம், மாதத்திற்கு £2,000 (இந்திய மதிப்பில் ரூபாய் ரெண்டு லட்சத்திற்கும் மேல்) வரை சம்பாதிக்கலாம்.

"இந்த இறுதிப் படியானது, பட்டதாரிகளை உலக விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கச்செய்து தகுதி வாய்ந்த நிபுணர்களாக மாற்றுகிறது என்று சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்.பூமிநாதன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram