Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலா

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன், தங்கள் குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் திரு.பூமிநாதன்  மற்றும் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக இணைய தளத்தையும் நடிகை ஶ்ரீலீலா தொடங்கி வைத்தார். அத்துடன் ஏவியேஷன் படிப்பில் இணைந்த முதல் 10 மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்களையும் ஶ்ரீலீலா தனது கரங்களால் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஶ்ரீலீலா பேசுகையில், 


சர்வதேச அளவில் கேட்டரிங் கல்வியில் முன்னிலை வகிக்கும் சென்னைஸ் அமிர்தா, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடந்த ஐகேஏ/சமையல் ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் உட்பட பத்து பதக்கங்களை வென்று சரித்திர சாதனை படைத்தது.   124 ஆண்டுகால வரலாற்றில் ஐகேஏ ஒலிம்பிக்கில்  இந்தியாவிற்கு முதன் முதலில் தங்கம் பெற்றுத் தந்த பெருமை சென்னைஸ் அமிர்தாவையே சேரும். ஷார்ஜாவில் நடந்த 27வது எக்ஸ்போ கலினயேர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெற்று சென்னைஸ் அமிர்தா சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola