போதைக்கு அடிமையாக்கிய மனிஷா.. அடிக்க பாய்ந்த 2 டாப் ஹீரோஸ் பகீர் தகவலை உடைத்த சுசித்ரா Suchitra about Srikanth krishna arrest

மனிஷா கொய்ராலா தான், இயக்குனர் மணிரத்னத்திற்கு போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தியது என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டீலர் ஒருவரும் சிக்கி உள்ளதால், போதை பொருள் நெட்வொர்க்கும் பெரிதாக இருக்கும் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இது தொடர்பாக 10 பிரபலங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் இருப்பதாகவும், அவர்களிடம் கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவர்கள் யார் யார் என்பதை இதுவரை போலீசார் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்.

இவர்களின் கைது குறித்தும், போதை கலாச்சாரம் குறித்தும் பிரபல யூட்யூப் சேனலில் பேசியுள்ள சுசித்ரா போதை பொருளை ஒரு நடிகை வாண்டடாக கொடுத்ததும், அதை தவிர்த்த இரண்டு நடிகர்கள் பற்றி பேசியுள்ளார். அதாவது பாலிவுட் திரை உலகில் இருந்து கோலிவுட் பக்கம் வரும் சிலர்தான் அங்கிருந்த போதை கலாச்சாரத்தை இங்கும் பரப்பி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்த சுசித்ரா, நடிகை மனிஷா கொய்ராலா தன்னுடன் நடித்த நடிகர் அரவிந்த்சாமி மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு போதை பொருள் உபயோகப்படுத்த கொக்கி போட்டதாகவும், அவர்கள் ஆணித்தனமாக போதையை பயன்படுத்த மறுத்து விட்டதாக கூறி உள்ளர். அதில் ஒரு நடிகர் அவரை அடிக்க பாய்ந்ததாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மனிஷா கொய்ராலா தான், இயக்குனர் மணிரத்னத்திற்கு போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தியது என்றும், அவருடைய முன்னாள் காதலரே ஒரு டீலராக இருந்தவர் என்றும் கூறியுள்ளார். மணிரத்னம் போதை பொருள் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர்கள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை என கேள்விப்பட்டதாகவும்... நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடல் படத்தில் பணியாற்றினார்கள் எனும் குறிப்பிட்டு பேசியுள்ளார் சுசித்ரா.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola