
Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!
நடிகை செளந்தர்யாவின் மறைவு விமான விபத்தல்ல கொலை என தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாவுக்கு கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருபதாகவும் ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவரின் புகாரல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2003ஆம் ஆண்டு ஜி.எஸ் ரகு என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன்பின்னர் பாஜகவில் இணைந்த நடிகை சௌவுந்தர்யா கடந்த 2004ஆம் ஆண்டு தனது 31வது வயதில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த நேரத்தில் கர்ப்பமாக இருந்ததும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவரது உடல் அப்போது கிடைக்கவில்லை. ஆனால் செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் ரஜினிகாந்தின் நன்பர் தான் காரணம் என காவல் நிளையத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்திருக்கிறார்.
இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து மொழியின் முன்னணி நடிகர்களும் மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அவர்களில் மிகவும் நெருக்கமான தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்பாபு தான் நடிகை செளந்தர்யாவின் மரணத்திற்கு காரணம் என சிட்டிமல்லு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரில் “நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல. அது கொலை. சௌந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க தெலுங்கின் பிரபல நடிகர் மோகன் பாபு வாங்க முயற்சி செய்தார். அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் நிலத்தை விற்க முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகு அவரது சகோதரரை மிரட்டி மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக் அபகரித்துள்ளார்.
இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த இடத்தை மோகன் பாபு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த இடத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன்பாபுவுக்கும் மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டது. இதில் மோகன் பாபுவை விசாரிக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிட்டிபாபு எழுதிய கடிதம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மோகன் பாபு தரப்பு கொடுக்கப்படும் விளகத்தை பொறுத்து விரைவில் நவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.