Virudhunagar : பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது!
ABP NADU
Updated at:
22 Mar 2022 05:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppVirudhunagar : காதலன் போல் நடித்து, காதலித்த பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி திமுக நிர்வாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து 1 வருட காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களும் தற்போது விருதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.