Armstrong Murder Case : ஜெய் பீம்-ண்ணா கொலையாளிகள் SKETCH! திடுக் தகவல்!

"ஜெய் பீம்னா" எனக்கூறி கொலையாளி கையசைத்து ஆர்ம்ஸ்டாங்கை அழைத்ததாகவும், அதனைக் கண்டு அருகாமையில் சென்று ஆம்ஸ்ட்ராங் பேச முயன்ற போது தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது..

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் எப்போதும் சொல்லும் ஒரே முழக்கம் தான் ஜெய் பீம். ஆம்ஸ்ட்ராங் அடக்கம் செய்யப்பட்ட போதும் அவருடைய சவப்பெட்டியில் ஜெய் பீம் என்ற வாசகம் தான் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே "ஜெய் பீம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி தான் கொலையாளிகள் அவரை தனியாக அழைத்து கொலை செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை தமிழக காவல்துறை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், தற்போது பல்வேறு தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிடுவதற்காக ஆர்ம்ஸ்ட்ராங் அந்த பகுதிக்கு வந்திருந்த போது, கொலையாளிகள் மிக நுணுக்கமாக ஸ்கெட்ச் போட்டு ஆர்ம்ஸ்ட்ராங்கை வீழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

ஆம்ஸ்ட்ராங் கட்டி வரும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பிரபல உணவகம் இருந்துள்ளது அதனால் எப்போதுமே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அதிக அளவில் அங்கு தங்களுடைய டூவீலரில் வந்து நிற்பது வழக்கம். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கும்பல், உணவு டெலிவரி ஊழியர் போல உடை அணிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

 

அப்போது உணவு டெலிவரி செய்யும் டீ சர்ட் உடன் வந்த நபர் ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை பார்த்து கையசைத்து ஜெய் பீம்னா என்று அழைத்துள்ளார். உடனே நம்மை நன்கு அறிந்த தம்பி யாரோ ஒருவர் தான் அழைக்கிறார் என நினைத்து ஆம்ஸ்ட்ராங்கும் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி தனியாக அவர் அருகே சென்றுள்ளார்.

 

இந்நிலையில் தனியாக ஆர்ம்ஸ்ட்ராங் தன்னுடைய நண்பர்களை விட்டு விலகி வந்த இந்த நேரத்தை பயன்படுத்திய கொம்பன் சரமாரியாக அவரை வெட்டி சாய்த்துள்ளது.

 

இந்நிலையில் தன்னுடைய பேச்சிலும் மூச்சிலும் ஜெய் பீம் என்ற வார்த்தையையே சுமந்து வந்த ஆர்ம்ஸ்ட்ராங் இறுதியாக தன்னுடைய காதுகளில் கேட்ட வார்த்தை ஜெய் பீம் தான். ஆனால் அதே நேரம் அவரை கொலை செய்ய அதே ஜெய் பீம் என்ற வார்த்தையே கொலையாளிகள் பயன்படுத்தி உள்ளதாக வெளியாகி வரும் தகவல் சோகம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola