Surf Excel Sucess Story: ஒவ்வொரு கறைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு!

Continues below advertisement

ஹிந்துஸ்தான் யுனிலிவர் குழுமத்தின் முக்கியமான பிராண்ட்களில் ஒன்று சர்ப் எக்ஸெல். 2005-ம் ஆண்டு இந்த பிராண்டில் ஒரு தேக்க நிலை உருவாகிறது. விற்பனையில் பெரிய வளர்ச்சி இல்லை. அப்போது பல விதமான யுக்திகள் உருவாக்கப்படுகிறது. எதற்கும் பயனில்லை.

சாக்லேட் கறையை நீக்கும், இங்க் கறையை நீக்கும், அனைத்து கறையையும் நீக்கும், துணி துவைத்தால் கலர் போகாது, குறைந்த நேரத்தில் துணி துவைக்க முடியும் என பல யுக்திகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் எதுவும் பயனில்லை. தள்ளுபடி, 10 சதவீதம் கூடுதல் பவுடர் என விலையிலும் பல மாற்றங்களை செய்தாலும் எந்த பயனும் இல்லை. பிராண்டில் பெரிய வளர்ச்சி இல்லை. அப்போது பிரேசில் நாட்டின் parenting பழக்கம் குறித்து ஹெச்.யு.எல். நிறுவனத்துக்கு தெரியவருகிறது. இந்திய அம்மாகளுக்கு குழந்தைகளின் ஆடையில் கறை இருந்தால் பிடிக்காது. ஆனால் பிரேசில் நாட்டில் குழந்தைகளின் ஆடைகள் கறை இருந்தால் மட்டுமே குழந்தைகள் எதாவது கற்றுக்கொள்கிறார்கள் என பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்திய அம்மாக்களுக்கு கறை பிடிக்காது. ஆனால் கற்றுக்கொள்ளுதல் பிடிக்கும் என்பதை அடிப்படையாக வைத்து விளம்பரங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது ஹெச்.யூ.எல். பிரபலமான லிண்டாஸ் நிறுவனம் இந்த விளம்பரத்தை வடிமைத்து கொடுத்தது. குழந்தைகள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை அம்மாக்கள் எப்படி தெரிந்துகொள்கிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் கதை அல்லது கற்றல் என்ன என்பதுதான் விளம்பரம் என முடிவாகிவிட்டது. `ஒவ்வொரு கறைக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது` ( Behind every stain is a story) என்பதுதான் ஆரம்பகட்ட விளம்பர வாசகமாக இருந்தது. ஆனால் இது சிறப்பாக இல்லை என்பதால் மேலும் காலத்தை எடுத்துக்கொண்டு குழு விவாதிக்கிறது.

அண்ணனும் தங்கையையும் நடந்துவருகிறார்கள். தங்கை சேற்றில் விழுந்துவிடுகிறார். உடனே அண்ணன் சேறுடன் சண்டை இடுவான். கறை நல்லது என இந்த விளம்பரம் முடியும். கறை நல்லது என்னும் பெயரில் பல விளம்பரங்களை வெளியிட்டது ஹெச்.யு.எல். இந்த விளம்பரத்துக்கு பிறகு பெரிய சர்ப் எக்ஸெல் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இருந்தது. 2000 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் மிகச்சிறந்த விளம்பரமாக கறை நல்லது விளம்பரத்தை எகனாமிக் டைம்ஸ் தேர்ந்தெடுத்தது.

1959-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிராண்ட், தற்போதும் வெற்றிகரமாக விற்பனையாகி வருவதற்கு இந்த விளம்பரமும் ஒரு காரணம். 2020-ம் ஆண்டு நிலவரப்படி இந்த பிராண்டின் வருமானம் மட்டும் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. (2019-ம் ஆண்டின் வருமானம்: ரூ.5,375 கோடி).

சோப்புதூள் சந்தையில் 17.9 சதவீத சந்தை இருக்கிறது. ஹெச்.யு.எல் நிறுவனத்தின் வருமானத்தில் 14 சதவீதம் சர்ப் மூலமாகவே கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் சர்ப் பெரிய சந்தையை வைத்திருந்தது. இதனை நிர்மா 1985-ம் ஆண்டு உடைத்தது. இதற்காகவே குறைந்த விலை கொண்ட `வீல்’ என்னும் பிராண்டினை ஹெச்.யு.எல் அறிமுகம் செய்தது. 1990 முதல் 2012-ம் ஆண்டு வரை வீல் பெரிய சந்தையை வைத்திருந்தது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram