மணிக்கு 115 கிமீ வேகம்..அசத்தலான அப்டேட்டுகளுடன் களம் இறங்கியது Ola Electric Scooter | Ola S1, S1Pro

Continues below advertisement

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவின் 75 வது சுதந்திர தினமான இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எஸ் 1 ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாயாக உள்ளது. அதேபோல் எஸ் 1 ப்ரோ வகை ஸ்கூட்டரின் விலை 1,29,999 ரூபாய் ஆக உள்ளது. ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? எஸ் 1 ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் தேவைப்படும்.

இந்த வகை பேக் முழு சார்ஜில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும் இந்த எஸ் 1 ஸ்கூட்டர் 0-40 கிலோ மீட்டர் வேகத்திற்கு 3.6 விநாடிகளில் செல்லும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர் எஸ் 1 ஸ்கூட்டரைவிட 30 ஆயிரம் விலை அதிகமாக உள்ளது. இந்த வகை ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 115 கிலோ மீட்டராக உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் 0-40 கிலோமீட்டர் வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. மேலும் இந்த ஸ்கூட்டரில் வாயிஸ் அசிஸ்டி மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை உள்ளன. இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்பிளேவில் எவ்வளவு கார்பன் வெளியிடுவதை இந்த வண்டி மிச்சப்படுத்தியிருக்கிறது என்பதும் தெரியும். அத்துடன் ஓட்டுநர் இருப்பதை சென்சார் மூலம் அறிந்து இந்த வண்டி தானாகவே அன்லாக் செய்யும். மலைப்பகுதியில் எளிமையாக ஓட்டும் வசதி, ரிவர்ஸ் அசிஸ்டி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. இதில் 7 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3 ஜிபி ரேம் ஆக்டாகோர் பிராசஸர் ஆகியவையும் உள்ளது.

ஓலா நிறுவனம் விநாடிக்கு 2 ஸ்கூட்டரை தயாரிக்கும் திறனை தற்போது பெற்றுள்ளது. இதனால் விரைவில் 400 நகரங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் ஓலா ஸ்கூட்டருக்கு தேவையான சார்ஜிங் இடங்களும் 100 நகரங்களில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த வண்டியை ஆன்லைன் முறையில் புக் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து வண்டியை தரவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலாவின் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ வகை எலக்டிரிக் வண்டிகள் பஜாஜ் நிறுவனத்தின் சேதக், ஏதர் 450 எக்ஸ், சிம்பிள் ஒன் மற்றும் டிவிஎஸ் ஐ-கியூப் ஆகிய வண்டிகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 15ஆம் தேதி வெறும் 499 ரூபாய்க்கு மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஓலா தொடங்கியது. முதல் 24 மணி நேரத்திற்குள் நிறுவனம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் டீசரில், இ-ஸ்கூட்டர் பிரிவில் சிறந்த அம்சங்களை வழங்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram