மேலும் அறிய

புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள்: தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு! உங்க ஊர் இருக்கா?

திருச்சிராப்பள்ளி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயில்களின் சேவை வாரத்திற்கு ஆறு நாட்களில் இருந்து இனி தினசரி சேவையாக மாற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள்: தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு! உங்க ஊர் இருக்கா?

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள் மற்றும் சில ரயில்களின் சேவை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று (மார்ச் 6) தமிழ்நாட்டில் நான்கு புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவை,  பாலக்காடு - பொள்ளாச்சி மின்சார ரயில், மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூர் - தன்பாத் இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.

மேலும், திருச்சிராப்பள்ளி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயில்களின் சேவை வாரத்திற்கு ஆறு நாட்களில் இருந்து இனி தினசரி சேவையாக மாற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரத்திற்கு மூன்று முறை மட்டும் இயக்கப்பட்டு வந்த சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும். மங்களூரு சென்ட்ரல் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உடுமலைப்பேட்டை மற்றும் பரமக்குடி ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். அதேபோல், தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் பண்ருட்டி நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

புதிய ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள்: தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு! உங்க ஊர் இருக்கா?

புதிய ரயில் சேவைகள், குறிப்பாக மயிலாடுதுறை - காரைக்குடி மற்றும் தன்பாத் - போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை தெற்கு மாவட்ட பயணிகள் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். மண்டல ரயில்வே பயனர் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே. பாண்டியராஜா கூறியதாவது, பட்டுகோட்டை மற்றும் திருவாரூரை இணைக்கும் காரைக்குடி - மயிலாடுதுறை ரயில் சேவை என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்தது, அது தற்போது நிறைவேறியுள்ளது. போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் ரயில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வணிக ரீதியாக பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

ரயில் பயணிகள் மேலும் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, பாலக்காடு - பொள்ளாச்சி  ரயில் சேவையை பழனி வழியாக திண்டுக்கல் வரை நீட்டிக்க வேண்டும். கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருவதால் வெறும் 60 கி.மீ தூரம் மட்டுமே இயங்கும் இந்த ரயிலை 120 கி.மீ வரை நீட்டித்தால் அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விசா இல்லா வசதி... ஆனால் இத்தனை சிக்கல்களா? வியட்நாம் செல்லும் இந்தியர்கள் கவனத்திற்கு!
விசா இல்லா வசதி... ஆனால் இத்தனை சிக்கல்களா? வியட்நாம் செல்லும் இந்தியர்கள் கவனத்திற்கு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மதுரை வழித்தடத்தில் மாற்றம்: உங்கள் பயணம் பாதிக்கப்படுமா?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மதுரை வழித்தடத்தில் மாற்றம்: உங்கள் பயணம் பாதிக்கப்படுமா?
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Tata Vs Mahindra SUV: டாடா-வா.? மஹிந்திரா-வா.? பாதுகாப்பு, அம்சங்கள்ல எந்த நிறுவனத்தோட SUV சிறந்தது.? வாங்க தெரிஞ்சுப்போம்
டாடா-வா.? மஹிந்திரா-வா.? பாதுகாப்பு, அம்சங்கள்ல எந்த நிறுவனத்தோட SUV சிறந்தது.? வாங்க தெரிஞ்சுப்போம்
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
Embed widget