மேலும் அறிய

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் பயண நேர மாற்றம்! ஓசூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் வகையில் ஓசூர் நிலையத்தில் ரயில் எண் 20642 கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை தென்மேற்கு ரயில்வே மாற்றியுள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். 

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் பயண நேர மாற்றம்! ஓசூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை ரயில்வே அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இந்த அதிவேக ரயில் தென்மேற்கு ரயில்வே (SWR) மண்டலத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி 1, 2024 அன்று தனது வழக்கமான சேவையைத் தொடங்கியது. ரயில் எண் 20642/20641 கோவை - பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் 377 கி.மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக இயங்குகிறது.

கோவை மற்றும் பெங்களூரு இடையிலான பயணத்தின் போது, இந்த வந்தே பாரத் ரயில் ஐந்து நிலையங்களில் நிற்கிறது.  ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர். இந்த ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்குகிறது. ரயில் எண் 20642 கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து காலை 07:25 மணிக்குப் புறப்பட்டு மதியம் 13:45 மணிக்கு பெங்களூரு கேண்ட்டை சென்றடைகிறது. அதன் மறுமார்க்கத்தில், ரயில் எண் 20641 பெங்களூரு - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கர்நாடக தலைநகரில் இருந்து மதியம் 14:20 மணிக்குப் புறப்பட்டு இரவு 20:40 மணிக்கு கோவையை வந்தடைகிறது.

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் பயண நேர மாற்றம்! ஓசூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தற்போது, மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் வகையில் ஓசூர் நிலையத்தில் ரயில் எண் 20642 கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை தென்மேற்கு ரயில்வே மாற்றியுள்ளது. இந்த ரயில் தற்போதைய நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக ஓசூர் வந்தடையும். அதாவது, தற்போது மதியம் 12:03 மணிக்கு வருவதற்கு பதிலாக, மார்ச் 15 முதல் மதியம் 12:13 மணிக்கு ஓசூர் சென்றடையும். ஓசூர் நிலையத்தில் நேர மாற்றம் மார்ச் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.  மற்ற நிலையங்களின் நேரங்களில் மாற்றமில்லை.

  • ரயில் எண் 20642: கோவை - பெங்களூரு கேண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
  • ஓசூர் நிலையம்: தற்போதைய நேரம் - 12.03 / 12.05 (வருகை / புறப்பாடு).
  • ஓசூர் நிலையம்: மாற்றப்பட்ட நேரம் - 12.13 / 12.15 (வருகை / புறப்பாடு).

இதர நிலையங்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் கோவை மற்றும் பெங்களூரு இடையே ஏசி சேர் கார் வகுப்பில் பயணிக்க ரூ. 1,260 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸிகியூட்டிவ் சேர் கார் (இ.சி) வகுப்பிற்கு இந்தக் கட்டணம் ரூ. 2,190 ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
PM Modi On Women Quota Bill: “இதை எதிர்த்தால், பெண்களே உங்களை விட்டுவைக்க மாட்டார்கள்“; எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை
“இதை எதிர்த்தால், பெண்களே உங்களை விட்டுவைக்க மாட்டார்கள்“; எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Tasmac Holiday : 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Embed widget