YouTube Update: கூகுளின் முக்கிய ப்ளார்பார்ம் யூட்யூப்! முதன்மையானதாக இருக்கக் கூடிய யூட்யூப் கூடிய விரைவில் அதிரடியான அப்டேட்டை கொடுக்கவிருக்கிறது. அதில் ஒடிடி தளத்தினைப்போல் படங்கள் ரிலீசாகவிருக்கின்றன.

  


சமீபத்தில் திரையரங்கு அளவிற்கு இல்லை என்றாலும், பெரும்பாலான படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. குறிப்பாக உலக அளவில் ஓடிடிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது திரைத்துறையில் மிகப்பெரிய மார்க்கெட்டினை திறந்து வைத்துள்ளது எனலாம். தொடக்கத்தில் ஓடிடிக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


நெட்பிள்க்ஸ், அமேசான், சோனி லைவ், டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள், சீரிஸ்கள், என ரிலிசாகி வந்தன. குறிப்பாக சீரிஸ்கள் உலக அளவில் சென்றடையவும், வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தது. இது குறித்து, யூட்யூப் நிறுவனத்தின் சார்பில், வால் ஸ்டிரீட் ஜெர்னலுக்கு தெரிவித்துள்ளதாவது, யூட்யூப்பும் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதற்கான யோசனையில் ஈடுபட்டுள்ளது.


இது கூடிய விரைவில் யூடூபின் புதிய அப்டேடில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதற்கென தனி மெம்பர் ஷிப்பை உருவாக்கி, வீடியோக்கள் ஸ்டிரீம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் இன்றைக்கு கேபிள் அல்லது செயற்கை கோள் மூலம் தங்களின் பொழுதுபோக்குக்கான விஷயங்களை தங்களுக்கு வசமாக்கிக் கொள்கின்றனர். இதனால், யூட்யூப்பிலும் இதுபோன்ற ஆன்லைன் ஸ்டிரீமிங் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ஆப்பிள் மற்றும் பல்வேறு முன்னனி நிறுவனக்க்ளௌடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து, ரூட்டர்ஸ் சார்பில் யூட்யூபின் தலைமையான ஆல்பபெட்டிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கப்படவில்லை, அதன் பின்னர் இந்த வார இறுதியில், நியூ யார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திலும் இது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கூடிய விரைவில் யூட்யூபிலும் கூடிய விரைவில் ஓடிடி தளங்களைப் போல, மெம்பர் ஷிப்புடன் வீடியோக்கள் ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண