வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில், ஏசி கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிட்டது. ஏசி வாங்குவது, சாதாரண விஷயம் இல்லை. வாங்குவதற்கு முன் அதுகுறித்து சில தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம். மார்ச் மாத மத்தியில் இருக்கிறோம். இப்போதே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டன நிலையில், இன்னும் போகப்போக நிலமை மோசமாகும் என்ற அச்சம் பலரிடமும் உள்ளது. அதுமட்டுமின்றி வெயில் அதிகரிக்க அதிகரிக்க, டிமாண்ட் கூடும்போது, ஏசி விலைகள் ஏற்றம் காணும். அதற்குள் ஏசி வாங்குவதற்கு தகுந்த நேரம் இதுவே. இப்போது வாங்கினால் குறைந்த விலையில், நல்ல ஏசியை பார்த்து நிதானமாக வாங்கி முடிக்கலாம். ஆனால் எந்த ஏசி நம் வீட்டுக்கு உகந்தது என்பதை கண்டறிவது எல்லோருக்குமே சவாலான விஷயமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல், நமக்கு தேவையான ஏசி எதுவென அறிந்துகொள்வதற்கு தொடர்ந்து படிக்கவும்.



ஸ்ப்லிட் ஏசியா விண்டோ ஏசியா?


ஸ்ப்ளிட் ஏசியை விட விண்டோ ஏசியின் விலை மலிவாக இருக்கும். விண்டோ ஏசி ஒரே வடிவில் எல்லாம் அடங்கியதாக இருக்கும். ஸ்ப்ளிட் ஏசி  இரண்டு பகுதிகளாக ஒன்று உள்ளும் மற்றொன்று வெளியேயும் வைக்கப்படும். எதுவாயினும் ஏதுவான காற்றோட்டம் தேவை. அறை பெரிதாகி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஸ்ப்லிட் ஏசி தான் சிறந்தது. ஏனெனில் அரை முழுவதும் குளிர்ந்த காற்றை பரப்பி, எல்லா இடங்களிலும் சம அளவான டெம்பரேச்சர் மெயின்டெயின் செய்யப்படுகிறது. இன்னொன்று ஸ்ப்லிட் ஏசி பார்ப்பதற்கு அழகாகவும், சத்தம் குறைவாகவும் இருக்கும். விண்டோ ஏசி சிறிய அறைகளுக்கு சிறந்தது. இதனை கழற்றுவதும் மாட்டுவதும் எளிதான விஷயம் என்பதால் பலர் இதனை விரும்புகின்றனர். இன்னொன்று ஸ்ப்லிட் ஏசியை ஒப்பிடும் போது விலை குறைவாக கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்வதற்கும் ஒரே ஒரு ஜன்னல் இருந்தால் போதும்.


எத்தனை டன் வேண்டும்?


ஏசி வாங்குவதற்கு முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இதுதான். கடைக்கு சென்று ஏசி வாங்க வேண்டும் என்று கூறினால் முதலில் கேட்கப்படும் கேள்வி எத்தனை டன் என்பதுதான். ஏசி வாங்கும் முன் அதன் கொள்ளளவைக் கணக்கிடுதல் அவசியம். அறையில் அளவிற்கு ஏற்ப ஏசியின் கொள்ளளவு இருக்க வேண்டும். அதனைப் பொறுத்து எத்தனை டன் ஏசி வாங்கலாம் என முடிவு செய்யவும். 100 - 120 சதுர அடி அளவுள்ள அறைக்கு 1 டன் ஏசியும், 120 - 180 சதுர அடி அளவுள்ள அறைக்கு 1.5 டன் ஏசியும், 180 - 240 சதுர அடி அறைக்கு 2 டன் ஏசி கச்சிதமான பொருத்தமாகும்.



மின்சார சேமிப்பு


ஏசிக்கு 5 ஸ்டார் இருந்தால், அது குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் என அர்த்தம். ஆனால் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே ஏ.சி பயன்பாடு எனும்பட்சத்தில் தாராளமாக 3 ஸ்டார் ஏசியை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்தும்போது நல்ல குளிர்ச்சி கிடைப்பதோடு மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும். ஸ்டார் மதிப்பு போல் BEE  ஸ்டார் மதிப்பையும் கவனிப்பது அவசியம். இதில் 5 ஸ்டார் BEE  என இருந்தால் அதன் மின்சார சேமிப்பு அதிகமாக இருக்கும், 3 என இருந்தால் குறைவாக இருக்கும். ஆனால் இரண்டிலும் டன் கொள்ளளவு ஒரே மாதிரியாகவே இருக்கும்.


எக்ஸ்டரா அம்சங்கள்


பலரும் இன்வெர்டர் ஏசி வாங்குவது நல்ல யோசனை என்கின்றனர். பலரும் இன்று  இதைத்தான்  விரும்புகின்றனர். ஏனெனில் அதன் வேகம் நிலையானதாக இருக்கும். அதன் மோட்டார் வேகம் அதிகமாக இருக்கும். விரைவில் அரை குளுமையாகிவிடும். அதேசமயம் மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் இது சிறந்தது என்கின்றனர். ஃபில்டரில் மட்டுமல்ல, ஸ்மார் ஏசிக்களும் இருக்கின்றன. நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னரே உங்கள் செல்ஃபோனால் ஆன் செய்து வீட்டைக் குளுமையாக்கலாம், மின்விசிறியின் குறைந்த சத்தம், கொசுவைக் கண்டால் ஒழிப்பது போன்ற அம்சங்கள் கொண்டு வருகின்றன. அவை அதன் அம்சங்களுக்கு ஏற்ப விலையிலும் ஏற்றங்கள் இருக்கின்றன. உங்களது தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுவது சிறந்தது.