பட்ஜெட் ஆண்ட்ராய்ட் பிரியர்களை ஈர்க்கும் வகையில் களமிறங்கிய நிறுவனம்தான்  சியோமி. மிக குறைந்த காலத்திலேயே நம்பிக்கைக்குரிய மொபைல் நிறுவனமாக மாறிப்போன சியோமி தற்போது தனது அடுத்தடுத்த படைப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்னும் இரு தினங்களில் சியோமி இந்தியாவில் தனது புதிய மாடல் மொபைல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. Xiaomi 11T Pro என்ற பெயரில் சியோமி அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்போன் விலை மற்றும் வசதிகள் குறித்து பார்க்கலாம்.


 


தோற்றம் :


5ஜி மொபைல்போனாக உருவாக்கப்பட்டுள்ள Xiaomi 11T Proவானது  5G  என்னும் லோகோவை தனது பின்பக்க பேனலில் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்க்கம் 3 கேமரா வசதியையும் கொண்டிருக்கிறது. செல்ஃபி கேமராவை பொருத்தவரையும் அட்வாட்ஸ் தொழில்நுட்பம் என அறியப்படும் பஞ்ச் ஹோல் கேமரா வசதியை கொண்டிருக்கிறது.வழக்கம் போலவே பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் மொபைலின் வலது பக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


 




வசதிகள் :


வசதிகளை பொருத்தவரையில் Xiaomi 11T Pro வானது 6.67-இன்ச் FHD+ AMOLED பேனல் வசதிகளுடன்  120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷிங் ரேட் வசதியையும் டால்பி விஷன் மற்றும் MEMCக்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு களமிறங்கவுள்ளது. புராஸசராக octa-core Qualcomm Snapdragon 888 ஐ கொண்டு இயங்குகிறது   மூன்றி வகையான நினைவக திறனுடன் அறிமுகமாகவுள்ளது சியோமி 11 டி புரோ. ஒன்று 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், அடுத்ததாக  8GB RAM மற்றும் 256GB உள்ளீட்டு நினைவக வசதி , இறுதியாக 12GB  RAM  மற்றும் 256GB வரையிலான உள்ளீட்டு நினைவகத்தை கொண்டுள்ளது. முன்பே கூறியது போல Xiaomi 11T Pro மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது .


அதில் 108MP அளவிலான முதன்மை கேமரா, 8MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 5MP டெலி-மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா வசதி கிடைக்கிறது.பேட்டரியைப் பொறுத்தவரை, Xiaomi 11T Pro ஆனது USB Type-C என்னும் சார்ஜிங் போர்ட்டில் 120W வரையிலான ஆதரவை பெறுகிறது. இதன் மூலம் மொபைலுக்கான   சார்ஜிங் வேகமாக கிடைக்கும். Xiaomi 11T Pro  இன் பேட்டரியின் திறன் 5,000mAh ஆகும்.  ஆண்ட்ராய்டு 11  இயங்குதளத்துடன்  MIUI 12.5 இல் Xiaomi 11T Pro ஐ இயக்குகிறது . 




விலை :


ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகமாகியுள்ள  Xiaomi 11T Pro ஆனது வருகிற ஜனவரி மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதன் நிறத்தை பொருத்த வரை விண்கல் சாம்பல், மூன்லைட் ஒயிட் மற்றும் செலஸ்டியல் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. உறுதி செய்ப்பட்ட விலை தற்போது வெளியாகவில்லை என்றாலும் இந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பட்ஜெட்டில் மொபைல்போன் சந்தைப்படுத்தப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. RAM மற்றும் உள்ளீட்டு நினைவக திறனை பொருத்து விலை மாறுபடும்.  Xiaomi 11T Pro  மொபைல்போனை வாடிக்கையாளர்கள்  Xiaomiயின் சொந்த இணையதளம் மற்றும் Amazon India வழியாக பெற்றுக்கொள்ளலாம். 


 


Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!