நீங்கள் ட்விட்டரில் உலாவும் நபர் என்றால் Wordle என்ற வார்த்தை உங்கள் கண்ணில் சிக்கியிருக்கும். பலரும் கட்டங்களை நிரப்பி வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டு வோர்டில் தான் அடுத்த ட்ரெண்டிங்காக உள்ளது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரும் நேற்று பாஜக கட்சி தொடர்பான கஸ்டம் வோர்டிலை உருவாக்கி வாய்ப்பு தந்தார். அவரை பின் தொடரும் பலரும் அவர் பகிர்ந்த லிங்கை க்ளிக் செய்து புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருகின்றனர். தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை என்று நினைப்பவர்கள் மேற்கொண்டு படியுங்கள்...
Wordle:
ரயில்களிலும், பேருந்துகளிலும், பூங்காக்களிலும் தினசரி பேப்பரை மடித்து வைத்துக்கொண்டு குறுக்கெழுத்து விளையாடும் பலரையும் நாம் பார்த்திருக்கலாம். அந்த குறுக்கெழுத்துக்கென தனி ரசிகர்கள் இன்றும் உண்டு. அந்த குறுக்கெழுத்தின் டிஜிட்டல் வடிவம் தான் இந்த Wordle. குறுக்கெழுத்தின் அப்டேட் என்றுக் கூட சொல்லலாம். அமெரிக்காவின் சாப்ட்வேர் எஞ்சினியரான ஜோஸ் வார்டில் என்பவர் இந்த Wordle வார்த்தை விளையாட்டை உருவாக்கினார். 5 எழுத்துக்களுக்கான இடம் கொண்ட 5 கட்டங்கள் இருக்குள். ஒரு நாளைக்கு ஒரு வார்த்தை உருவாக்கப்படும். அதனை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
சரியான எழுத்துகளை உள்ளே பதிவிட்டு சரியான வார்த்தைகளை கன்ண்டிபிடிக்க வேண்டும். நீங்கள் பதிவிடும் எழுத்து சரி என்றால் பச்சை நிறத்திலும், நீங்கள் குறிப்பிடும் அடுத்த எழுத்து அந்த குறிப்பிட்ட வார்த்தையில் உள்ளது. ஆனால் பதிவிடும் இடம் தவறு என்றால் மஞ்சள் நிறமாக குறிக்கப்படும். நீங்கள் குறிப்பிடும் எழுத்து அந்த குறிப்பிட்ட வார்த்தையில் இல்லையே என்றால் சாம்பல் நிறமாக காட்டும்.
நீங்கள் சரியான வார்த்தையை கண்டுபிடித்தால் அதனை மீண்டும் வெறும் கட்டங்களாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி கண்டுபிடிக்க சொல்லலாம். இந்த விளையாட்டு தற்போது அடுத்தக்கட்டத்தையும் தொட்டுவிட்டது. அதாவது கஸ்டம் வோர்டிலைஇப்போது உருவாக்க முடியும். அதாவது நாமே வோர்டிலை உருவாக்கி அதனை நண்பர்களுடன் பகிந்து விடையை கண்டிபிடிக்க சொல்லலாம். இந்த கஸ்டம் தற்போது இணையவாசிகளிடம் ட்ரெண்டாகி வருகிறது.
நீங்களும் வோர்டில் விளையாட: https://mywordle.strivemath.com/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்