ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை ஜியோ நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு முன்னதாக சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


 இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு புதிய புதிய சலுகைகளை சந்தையில் அறிமுகப்படுத்திவருகிறது. இதனாலே ஜியோ சிம் தொடங்கி, ஜியோ பைபர் வரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின், 44 வது வருடாந்திரக்கூட்டத்தில் மலிவான விலையில் அதிக வசதியுடன் கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்கிற 4 ஜி ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம்  செய்யவுள்ளதாக அறிவித்தது. குறிப்பாக கூகுள் நிறுவனத்துடன் இணைத்து தயாரிக்கப்பட்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தியன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருந்தது. மேலும் இதற்கான முன்பதிவும் தொடங்கியது.





குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல் முறையான ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துபவர்களுக்கும் வசதியாக ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து தயாரித்த மலிவு விலை ஸ்மார்ட்போன் விற்பனைக்காக மக்கள் எதிர்ப்பார்த்துக்காத்திருந்தனர். ஆனால் சில காரணங்களாக செப்டம்பர் 10 ஆம் தேதி சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்த நிலையில் தான், தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 4 ஆம் தேதிக்கு முன்னதாக சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால் ஜியோ நெக்ஸ்ட் 4 ஜி ஸ்மார்ட் போன் வெளியீடு தாமதம் ஆவதற்கான காரணம் எதுவும் சரியாக இந்நிறுவனம் குறிப்பிடவில்லை. இருந்தப்போதும் ஊடகங்கள் வாயிலான வெயியான தகவலின் படி, தற்போது தொழில்துறையில் நிலவும் உலகளாவிய சிப் பற்றாக்குறையை பற்றி இந்நிறுவனம் தெரிவித்துள்ளதால் இது தான் ஸ்மார்ட்போன் சந்தைக்கு தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிது. மேலும் இந்த சிப் பற்றாக்குறையின் காரணமாக மொபைல் போன்களின் விலை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரியவருகிறது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ நெக்ஸ்ட் 4 ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 3499 ஆக தான் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  





எனவே இந்நேரத்தில் ஜியோ போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்று அறிந்துக்கொள்வோம். குறிப்பாக முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைக் கருத்தில் கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.   அதன்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது 5.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 SoC உடனாக 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி இஎம்எம்சி 4.5 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும்  ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனின் கீழ் இயங்கும் மற்றும் கூகுள் கேமராவுடன் HDR, நைட் மோட் மற்றும் ஸ்னாப்சாட் பில்டர்களுக்கான ஆதரவுடன் வரும். கேமராக்களை பொறுத்தவரை, இது 13 எம்பி பின்புற கேமராவையும் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வசதியினைக்கொண்டிருக்கும். இதோடு இந்த ஸ்மார்ட்போனில் 4G VoLTE ஆதரவுடன் டூயல் சிம் கார்டு ஸ்லாட்ஸ் இருக்கும். மேலும் 2,500mAh பேட்டரி வசதியைக்கொண்டிருக்கும்.