உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் செயலியில் முக்கியமானது வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் கூகுள் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு புதிய அப்டேகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பிய பின்னரும் அதை எடிட் செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த அம்சம் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


வாட்ஸ் அப் எடிட் அம்சம்:


அலுவலக பணி தொடங்கி, நன் உறவுகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் தனது பயனர்களை திருப்திப்படுத்தவும், வாட்ஸ் அப் சர்வீஸை மேம்படுத்தவும் புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அனுப்பிய மெசேஜை திருத்தும் வசதி விரைவில் வாட்ஸ் அப்-ல் வர உள்ளது. இது ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்ட் மற்றும் டெஸ்க்டாப் என அனைத்து வடிவிலும் இந்த வசதி இடம்பெறும் வகையில் டெபலபிங் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்த இருக்கிறது. 


வாட்ஸ் அப் மேற்கொண்டு வரும் அப்டேட் பணிகள்:


WABetaInfo வெளியிட்டிருக்கும் ஸ்க்ரீன்ஷாட் படி குழுவில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டால் “only you and group admins will be notified that you left the group” என்ற வாசகத்துடன் கூடிய பாப் அப் தோன்றும். அதில் எக்ஸிட் க்ரூப் என்பதை கொடுத்தவுடன், யாருக்கும் தெரியாமல் அந்த குழுவில் இருந்து வெளியேறிவிடலாம். இந்த வசதியானது இப்போதைக்கு வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பிற்கு உருவாக்கும் பணிகள் நடைபெற்றாலும், விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்க்கு கொண்டுவரப்படும். குழுவில் தற்போது அதிகபட்சமாக 256 பேரை மட்டுமே சேர்க்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அதை 512 ஆக அதிகரிக்கும் வசதியை உருவாக்கிக்கொண்டிருப்பதாக சமீபத்தில் தான் செய்திகள் வெளியாகியிருந்தது.




இந்த வசதி மட்டுமல்லாது கம்யூனிட்டி வசதியையும் வாட்சப் நிறுவனம் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது. இரண்டு வேறு குழுக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரலாம். இதன் மூலம் சிறு உரையாடல்களை செய்யலாம். இந்த கம்யூனிட்டி வசதியில் அறிவிப்பு வசதியும், எந்த குழுக்களை இணைக்கலாம் என்பதை அட்மின்கள் முடிவு செய்யும் வகையிலான பிரத்யேக வசதிகளும் இதில் இடம்பெறும்.


அதோடு, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பகிரப்படும் லிங்குகளின் ப்ரிவியூவை மாற்றும் வேலைகளிலும் இருக்கிறது வாட்ஸ் அப். தற்போதைய நிலையில் லிங்க்கை லாங் ப்ரஸ் செய்தால் தான் என்ன லிங்க் என்ன என்பது தெரிய வரும். ஆனால் தற்போதைய உருவாக்கத்தின் படி, லிங்க்கை ஸ்டேடஸில் வைத்து சிறிது நேரம் வைத்திருந்தால், அந்த லிங்கிற்கான ப்ரிவியூ உருவாகிவிடும். பின்னர் ஷேர் செய்யலாம். அதனால், அது என்ன லிங்க் என்பது, மற்றவர்களுக்கு அதை க்ளிக் செய்யாமலேயே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


யூசர்-ஃப்ரண்ட்லியாக இருக்க வேண்டும் என்பதால் மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் புதிதாக என்னெவெல்லாம் அப்டேட்கள் இருக்கும் என்பது பற்றிய தகவலுக்காக காத்திருக்கலாம்.