உலகெங்கிலும் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அப்ளிகேஷன்களில் ஒன்று வாட்சப். குறிப்பாக இந்தியாவில் இதன் பயன்பாடு மிக அதிகம். உடனடியாக செய்திகளை உலகெங்கிலும் அனுப்புவதற்கும், காணொலி அழைப்புகள் மற்றும் சாதாரண அழைப்புகளை மேற்கொள்வதற்கும் பயன்படும் இந்த அப்ளிகேஷனை பேஸ்புக் நிறுவனம் வாங்கி நடத்திக்கொண்டுள்ளது.
இந்த ஆப்பில் இல்லாத சில வசதிகளை கொண்டு உருவாக்கப்படும் ஆப்களுக்கு பெயர்தான் MOD ஆப். வாட்சப்பிற்கு அதேபோல நிறைய MOD வெர்ஷன்கள் உள்ளன. அதில் கிடைக்கும் வசதிகள் உதாரணத்திற்கு, ஒவ்வொரு சாட்டிற்கும் ஒவ்வொரு வால்பேப்பர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் தீம், தனி எழுத்து வடிவம், ஸ்டேட்டஸில் பெரிய வீடியோக்கள் பதிவு செய்யும் வசதி, இந்த பில்ட் ஸ்டிக்கர்கள், ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்யும் வசதி போன்ற பயனுள்ள வசதிகள் பல உண்டு என்றாலும், இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற ஆப்களை பயன்படுத்துவது நம் தரவுகள் மற்றும் தனியுரிமை பாதுகாப்புகள் கேள்விக்குறியாகின்றன.
இப்படியான பல வசதிகள் கண்டு கவரப்பட்டு பயன்படுத்தினாலும், அதிகரப்பூர்வமற்ற ஆப்களை பயன்படுத்துவது பயன்பாட்டாளர்களின் தனியுரிமையை கேள்விக்குட்படுத்துகிறது. இது போன்ற ஆப்கள் பிளே ஸ்டோரில் கிடைப்பதில்லை. அதன் ஆபத்து அறிந்து அவர்கள் அதனை பயனாளர்களுக்கு உபயோகிக்க ஊக்குவிப்பதில்லை. இது போன்ற MOD ஆப்கள் தனி வலைதளங்களில் கிடைக்கும். இவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தினால், ஆப்பிற்கான அப்டேட்களை ஆப்பே தரவிறக்கி கொடுக்கும்.
இது போன்ற ஆப்கள் இணையத்தில் நிறைய கிடைத்தாலும், ஒரு சில பிரபலமான ஆப்களை உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எஃப் எம் வாட்சப். இந்த ஆப்பின் 16.80.0 வெர்ஷனை டவுன்லோடு செய்பவர்கள் மொபைலில் ட்ரோஜன் வைரஸ் உள்ளே புகுவதாக கூறப்படுகிறது. ஒருமுறை அந்த வைரஸ் நம் மொபைலுக்குள் வந்துவிட்டால், அது பல ஆபத்தான தரவுகளை நம் மொபைலில் நமது அனுமதி இல்லாமலே இன்ஸ்டால் செய்கிறது. இந்த ஆப்பை நாம் திறந்த உடனே நமது தரவுகளை எடுத்துக்கொள்கிறார்கள், நமது பாஸ்வேர்ட், அக்கவுண்ட் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, அதை ஒரு சர்வரில் இணைகிறார்கள். இந்த ட்ரோஜன் வைரஸின் அபாயங்கள் மற்றும் செயல்பாடுகளை காஸ்பெர்ஸ்கியின் சைபர்செக்யூரிட்டி கண்டுபிடித்துள்ளனர்.
காஸ்பெர்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்ளே போகும் வைரஸ் தேவையில்லாத செயல்பாடுகளை மொபைலில் ஆன் செய்து, அதற்கேற்றார்போல் மொபைலை மாற்றுகிறது. மாற்றி முழு ஸ்க்ரீனிலும் விளம்பரங்கள் வரவைப்பது போன்ற வேலைகளை செய்கிறது. நமது வங்கி கணக்கையும் ஹேக் செய்யும் இந்த வைரஸ் நமது பணத்தையும் எடுக்கவல்லது.
இது போன்ற MOD ஆப்புகளை ஊக்குவிக்காத காஸ்பெர்ஸ்கி, பயனாளர்களை இது போன்ற ஆப்களை தரவிறக்கம் செய்யாதிருக்க வலியுறுத்துகிறது. கூகுளின் பிளே ஸ்டாரில் இருந்து டவுன்லோட் செய்தாலும் அதன் ரிவியூக்களை படித்துவிட்டு, ஆராய்ந்து தரவிறக்க வலியுறுத்துகிறது.