வாட்ஸப்பில் ஆடியோ, வீடியோ கால் வசதிகளில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  

Continues below advertisement

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.

Continues below advertisement

ஆடியோ / வீடியோ கால்:

வாட்ஸ் அப் செயலி, வெப் என இரண்டிலும்  பயனர்களின் ஆடியோ, வீடியோ வசதிகளில் அப்டேட் செய்துள்ளது. அதன்படி, ஆடியோ, வீடியோ குழு அழைப்புகளில் குறிப்பிட்ட நபர் தேர்வு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒருவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ், பார்ட்டி உள்ளிட்ட சூழல்களில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடியோ காலில் ஏற்கனவே ‘Night Mode' வசதி இருக்கிறது. போலவே, வீடியோ அழைப்புகளில் ’Effects' செலக்ட் செய்து அதை மாற்றும் வகையில் சில அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இதன்மூலம் வீடியோ தரம் சிறப்பாக இருக்குமாம்.

வாட்சப் டெஸ்க்டாப் பயனர்கள்:

வாட்ஸ் சப் வெப் பயனர்களின் வசதிக்கேற்ப அழைப்புகளில் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. 'dial a number directly -  dialpad’ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

வாட்ஸ் அப் சமீபத்தில் சாட் பாக்ஸில் ‘டைப்பிங்’ என்பதை இன்ஸ்டாகிராம், மெசேஞ்ஜரில் இருப்பதுபோன்ற அப்டேட்டை வழங்கியிருந்தது. இது வாட்ஸ் அப் குழுக்களில் உரையாடும்போது யார் டைப் செய்கிறார் என்பது அவர்களின் ப்ரோபைல் ஃபோட்டோவுடன் சாட் பாக்ஸில் தெரியும். ஆண்ட்ராய்ட் ஃபோன்களுக்கு மட்டும் இப்போது இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஐபோன் பயனர்களுக்கு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.