Whatsapp Update: வாட்ஸ் அப்பில் 15GB வரை மட்டுமே Backup எடுக்க முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இருந்து இந்த அம்சம் நடைமுறைக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
15 ஜிபி மட்டும்:
வாட்ஸ் அப்பில் 15GB வரை மட்டுமே Backup எடுக்க முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் Backup எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல டெக் நிறுவனங்கள் இலவச சேவைகளை நிறுத்திவிட்டு, சந்தா முறையை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, ஸ்பாட்டிபை நிறுவனம் சந்தா தொகையை அறிமுகப்படுத்தியது.
அதாவது, ஒரு பாடலில் குறிப்பிட்ட பாடல் வரியை Forward செய்து கேட்க வேண்டுமென்றால், சந்தா தொகையை கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை வந்திருக்கிறது. இந்நிலையில், தான் தற்போது வாட்ஸ் அப்பில் சந்தா முறை அறிமுகமாக உள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் 15 ஜிபி வரை மட்டும் பேக்அப் எடுக்க முடியும். உங்கள் தனிப்பட்ட கூகுள் கணக்கில் பேக் அப் ஆகும். 15 ஜிபிக்கு மேல் பேக்அப் போனால் தேவையில்லாத தரவுகளை டெலிட் செய்ய வேண்டும். இல்லையென்றால், டிரைவ் சேமிப்பை மாதம் மாதம் சந்தா கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும்.
எப்போது அறிமுகம்?
இது குறித்து கூகுள் ஊழியர் கூறுகையில், "வாட்ஸ் அப்பில் 15ஜிபிக்கு மேல் பேக்அப் எடுக்க முடியாது. ஒருவேளை 15ஜிபி தாண்டிவிட்டால், நாம் மாதம் மாதம் கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் ஃபைலை டெலிட் செய்ய வேண்டியிருக்கும். இந்த அம்சம் எப்போதும் போல் முதலில் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும். இந்த அம்சம் டிசம்பர் மாதத்தில் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கப்பெற, அடுத்தடுத்து அனைத்து பயனர்களுக்கும் விரிவடையும்" என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு வாட்ஸ் அப் பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க