இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப் செயலி இந்த செயலில் பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றங்களை செய்து வருகின்றனர். தற்போது தகவல் பரிமாற்றங்களுடன் இதில் வீடியோ கால் வசதி மற்றும் குரூப் சேட் வசதி பலரையும் கவர்ந்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி சில அப்டேட்களை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. அந்த அப்டேட்களில் அவர்கள் புதிதாக ஒரு வசதியை இணைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரேசில் நாட்டில் மட்டும் ஒரு புதிய வகை அப்டேட்டை அளித்துள்ளது. அதன்படி தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியின் மூலம் ஷாப்பிங் செய்ய ஏதுவாக இடங்களை தேடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களுடைய இடத்திலிருந்து அருகே உள்ள கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியவற்றை தேடும் வசதி இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் உள்ளிட்ட இரண்டு வகைகளுக்கும் பொருந்தும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் பிரேசிலில் மட்டும் வந்துள்ளது. விரைவில் இது உலகம் முழுவதும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் அனைவருக்கும் படிப்படியாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது முதலில் வாட்ஸ் அப்பில் தொழில் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் வரும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த அப்டேட் எப்போது மற்ற நாடுகளில் வரும் என்பது தொடர்பான தெளிவான தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப் செயலியில் தொழில்முறை கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேறு சில வசதிகளும் உடன் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்களுக்கு விரைவில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது வரும் பட்சத்தில் வாட்ஸ் அப் செயலின் மூலமே நம் அருகில் இருக்கும் ஷாப்பிங் இடங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: இனிமே சிம் கார்ட் இல்லை.. e-SIM தொழில்நுட்பத்தில் இயங்கும் ஐஃபோன்.. அறிமுகப்படுத்தும் Apple..