இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்கு சம்மந்தமே இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து கடந்த சில நாட்களாகவே அழைப்புகள் வர தொடங்கின. இந்நிலையில்,  வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தங்கள் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் அமைப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் மோசடி அழைப்புகள் வருவது 50 சதவீதம் வரை குறையும் என்று கூறியுள்ளனர்.


வாட்ஸ் - அப் செயலி:


மெட்டா குழுமத்திற்கு சொந்தமான வாட்ஸ் - அப் செயலி உலகம் முழுவதும் மாதத்திற்கு 200 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. குறுந்தகவல்களை அனுப்புவதில் முதன்மையான செயலியாகவும் திகழ்கிறது. பொதுமக்களிடையே இத்தையை பெரும் பயன்பாட்டை கொண்டிருப்பதே, அதில் பல்வேறு தவறுகள் நடைபெறுவதற்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் தான் பயனாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து புதிய பிரச்னை ஒன்று வாட்ஸ்- அப் செயலியில் உருவாகியுள்ளது.


வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள்:


குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்வது முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தற்போது வாட்ஸ்-அப் செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது சம்மந்தமே இல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு வருகிறது. குறிப்பாக மலேசியா, கென்யா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து இந்த அழைப்புகள் வருகின்றன. ஆனால், இந்த அழைப்புகளை மேற்கொள்வது யார், அவர்களுக்கு நோக்கம் என்ன என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.


குவிந்த புகார்கள்:


அநாவசிய அழைப்புகள் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் போன்றவற்றை பயனாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கவலைகளையும், புகாரையும் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்கள் சந்தேகத்திற்குரிய கணக்குகளை உடனடியாக பிளாக் செய்து, புகாரளிக்கும்படி மெட்டா நிறுவனம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


50 சதவீதம் குறைவு


இதுகுறித்து வாட்ஸ் அப் கூறுகையில், ”பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதை தங்களின் முன்னுரிமையாக உள்ளது. தற்போது சில நாட்களாக வெளிநாடுகளிலிருந்து மோசடி கால்கள் வருவதாக புகார் எழுந்தது. ஸ்பேம் கால்ஸ்களை குறைக்க வாட்ஸ் அப் அதன் AI, ML அமைப்புகளை மேம்படுத்தியுள்ளது.


இதன் மூலம் குறைந்தபட்சம் 50 சதவிதம் ஸ்பேம் கால்ஸ்களை கட்டுப்படுத்த முடியும்.  மேலும், பயனர்களுக்கு தரவுகளை பாதுகாப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும் அதனை பிளாக் செய்ய வேண்டும்.” என்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.


எப்படி பிளாக் செய்வது:



  • வாட்ஸ்அப்பில் ஒரு எண்ணை பிளாக் செய்ய, பயனாளர்கள் முதலில் குறிப்பிட்ட எண்ணிற்கான சாட் - பாக்ஸை திறக்க வேண்டும்

  • கால் ஆப்ஷனிற்கு அருகே உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்

  • பிளாக் எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்


பிளாக் செய்யப்பட்ட தொடர்புகளால் இனி உங்களை அழைக்கவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாது. உங்களுடைய லாஸ்ட் சீன், ஆன்லைனில் ஸ்டேடஸ்க்ள் மற்றும் உங்கள் சுயவிவரப் புகைப்படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என எதையுமே பிளாக் செய்த நபரால் இனி பார்க்க முடியாது.