whatsapp Feature: ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய அப்டேட்
அந்த வரிசையில், தற்போது ஆபரேடிங் சிஸ்டத்தில் (OS) இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே ஸ்மார்ட் வாட்ச் மாடலில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக மெட்டா நிறுவனம் Standalone app-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்தப்படியே மெசெஜ், கால் பேசுவது போன்று பல அம்சங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் இல்லாமலேயே வாட்ச் மூலம் செசேஜ்களுக்கு ரிப்ளை மற்றும் வாய்ஸ் மெசெஜ்களை அனுப்பவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், wear-க்கான கூகுளின் இயங்குதளத்தின் சமீபத்தில் அறிமுகமான wear os3 இல் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களில் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
அண்மையில் வந்த அப்டேட்
பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது வாட்ஸ் ஆப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பரை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம். இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும்போது உங்களது மொபைல் நம்பரானது குரூப் அட்மின் மற்றும் உங்கள் மொபைலில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காட்டும். மொபையில் பதிவு செய்யப்படாத நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்டப்படாது.
மேலும், மொபைலில் சேமிக்கப்படாத எண்களில் உள்ள, வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு கூட சக பயனர் குறுந்தகவலை அனுப்ப முடியும். முன்னதாக, யாரேனும் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்த புதிய அப்டேட்டால் அந்த நிலை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.