Whatsapp Feature: வாட்ஸ் அப்பில் ஐபி ப்ரொடெக்ட் (IP Protect) என்று அழைக்கப்படும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


வாட்ஸ் அப்:


தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.


புதிய அம்சம்:


அதன்படி, வாட்ஸ் அப்பில் ஐபி ப்ரொடெக்ட் (IP Protect) என்று அழைக்கப்படும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சம் உங்கள் வாட்ஸ் அப்பில் இயக்கப்பட்டதும் நீங்கள் அழைக்கும் நபர்களிடம் இருந்து உங்கள் ஐபி முகவரி மறைக்கப்படும்.  அதாவது, உங்கள் லொக்கேஷனை (Location) கண்காணிப்பதை கடினமாக்கும். வாட்ஸ் அப் காலில் நீங்கள் பேசுபவர்களிடம் இருந்து உங்கள் ஐபி முகவரியை மறைப்பதன் மூலம் உங்கள் பிரைவசி (Privacy) பாதுகாக்கப்படுகிறது. மேலும், இந்த அம்சம் உங்கள் வாட்ஸ் அப் கால்களுக்கு பாதுகாப்பையும் சேர்க்கும். இந்த அம்சத்தை இயக்கினால் வாட்ஸ் அப்  கால்களின்  தரம் (whatsapp Call Quality) சிறிதளவு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வசதி ஆண்டிராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


எப்படி பயன்படுத்துவது?



  • முதலில் வாட்ஸ் அப்பின் முகப்பு பக்கத்தின் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி  ஐகானை கிளிக் செய்ய வேண்டும். 

  • பின்னர், Settings ஆப்ஷனை கிளிக் செய்து பிரைவசி (Privacy) ஆப்ஷனை தேர்தெடுக்க வேண்டும். 

  • அதில், Advanced என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

  • அதில், Protect IP Address In Calls என்கிற  ஆப்ஷன் இருக்கும். அதன் பக்கத்தில், toggle on switch என்று ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  • இப்போது, உங்கள் வாட்ஸ் அப்பில் ஐபி ப்ரொடெக்ட் அம்சம் ஆன் செய்யப்பட்டு இருக்கும். 

  • இந்த அம்சம் இயக்கப்பட்டதும், வாட்ஸ் அப்பில் நீங்கள் கால் செய்யும் நபர்களிடம் இருந்து உங்கள் ஐபி அட்ரெஸ் மறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


PM Modi: "நீங்க இருக்கிற இடத்தில்தான் எனக்கு பண்டிகை"... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி உருக்கம்!