ஒருமுறைப் புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பினால் அதனைப் பார்த்தவுடன் தானாகவே டெலீட் ஆகிவிடும் வசதியை வாட்சப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இதனை சர்வதேச அளவில் வாட்சப் பயனாளர்களுக்கு அப்டேட் செய்துவருகிறது வாட்சப். இதன்மூலம் பயனாளர்களின் பிரைவசியை மேம்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். 







வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியின்படி நீங்கள் அனுப்பும் வீடியோ அல்லது புகைப்படம் ஒருமுறை பார்த்தவுடன் தானாகவே காணாமல் போகும்.வாட்சப் தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்களைப் புகுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஆப்பிள் போனிலிருந்து ஆண்ட்ராய்ட் போன்களுக்கு வாட்சப் தகவல்களை மாற்றிக்கொள்ளும் வசதியை அந்த நிறுவனம் கொண்டு வந்திருந்தது. 

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்த நிலையில் ஐபோன் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அப்டேட்டை வாட்ஸப் கொண்டு வரவுள்ளது. ஐபோன் வைத்திருக்கும் நீங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆண்ட்ராய்ட் மாறினால் உங்களது வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் எடுக்க முடியுமா என்றால், இப்போது முடியாது தான். ஆனால் வரப்போகும் அப்டேட் மூலம் இனி ஐபோனில் இருந்து மெசேஜ்களை ஆண்ட்ராய்ட்க்கு மாற்றிக்கொள்ளலாம். இது தொடர்பான தகவலை WABetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அங்கு பதிவிடப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில் அதற்கான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கொடுக்கப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்வது மூலம் ஆண்ட்ராய்டுக்கு உங்கள் மெசேஜ்களை மாற்றிக்கொள்ளலாம். இது குறித்து தெரிவித்துள்ள WABetaInfo, இந்த அப்டேட் இப்போதுதான் தயாராகி வருகிறது. விரைவில் வரும் அப்டேட்டில் இது இடம்பெறும் என தெரிவித்திருந்தது.முன்னதாக, ஐஓஎஸ் குரூப் கால் வசதியில் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்தது வாட்ஸ் அப்.  2.21.140.11 வெர்ஷனில் பீட்டா அப்டேட்டாக இந்த குரூப் கால் அப்டேட் வந்தது. ஒரு வெயிட்டிங் கால் ஆப்ஷனைப் போலவே இது கொடுக்கப்பட்டது. யாராவது உங்களுக்கு குரூப் கால் அழைப்பு கொடுத்தால் உங்களது ஸ்கிரீனில் அது தெரியும். ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ரிங் பட்டனும் உள்ளது. குறிப்பிட்ட குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் நீங்கள் மறுபடி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Tap to join” மூலம் இணைந்து கொள்ளலாம். வேண்டுமானால் வீடியோ காலை தவிர்க்க ‘ignore’ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.