ஜூம் வீடியோ காலுக்கு போட்டியாக வாட்ஸப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஜூம் காலில் இணைப்பை பயன்படுத்தி எவ்வாறு வீடியோ மற்றும் ஆடியோ காலை பேச முடியுமோ அதே போல வாட்ஸப்பிலும் இனி செய்ய முடியும் . ஆனால் தற்போது ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகமாகவுள்ளது. அதிலும் பீட்டா வெர்சனில் இருக்கும் ஒரு சில பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியை பெற்றுள்ளனர். ஐஓஎஸ் பயனாளர்களுக்கு தற்போது அறிமுகமாகவில்லை. ஆனால் விரைவில் எதிர்பார்க்கலாம்




உங்கள் Android சாதனத்திலிருந்து உங்கள் அழைப்பு இணைப்பை எவ்வாறு உருவாக்குவது ?



உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் விண்டோவைத் திறந்து அழைப்பு அழைப்புகள்  வசதிக்கு செல்லவும்.


‘create call link' என்ற பெயரில் ஒரு வசதியை காண்பீர்கள்.


‘create call link’. அம்சத்தை கிளிக் செய்தவுடன், பல வசதிகள் இருக்கும். 


அதில் குரல் அழைப்பா? அல்லது வீடியோ அழைப்பா? என்பதை தேர்வு செய்யவும்


இதனை வாட்ஸ் அப் வழியாகவோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ நீங்கள் அனுப்பலாம்.இதற்காக லிங் வசதி , ஷேரிங் வசதி மற்றும் நகலெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பத்தைத் தேர்வுசெய்து, உங்கள் தொடர்புடன் இணைப்பைப் பகிர தொடரலாம்.  வாட்ஸ்அப்பில்  உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த லிங்க் உங்கள் ஃபோன் எண்ணைப் பகிரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


ஒருமுறை, பங்கேற்பாளர் அழைப்பு இணைப்பில் பங்கேற்றால், அழைப்பு தானாகவே குழு அழைப்பாக மாற்றப்படும். create call link அம்சத்தின் மூலம் செய்யப்படும் அழைப்புகள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட என்க்ரிப்ஷனாக இருக்கும் என்றும், அழைப்பில் சேராதவர்கள் எந்த உரையாடலையும் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் WABetaInfo கூறுகிறது.







புதிய அழைப்பு இணைப்பு அம்சத்தை இதுவரை பெறாதவர்கள் விரைவில் அதைப் பெறுவார்கள், ஆனால் எப்போது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்த புதிய வசதி மூலம் 8 பேர் வரை இணைந்து உரையாட முடியும் . எதிர்காலத்தில் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூட வாய்ப்பிருக்கிறது . சமீப நாட்களாக வாட்ஸப் தனது பயனாளர்களை கவரும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.