நம் அனைவரது மொபைல்களிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மெசெஞ்சர் ஆப் வாட்ஸ் அப் ஆகும். சாட்டிங், மீடியா அனுப்புவது, லேட்டஸ்டாக பணப் பரிமாற்றம் உள்பட பல வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் ஒரு இன்றியமையாத செயலியாக உள்ளது. டெலிக்ராம், பேஸ்புக் மேசஞ்சர், போன்ற மாற்றுகள் இருந்தாலும், இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் தரும் அனுபவத்தை வேறு யாரும் தரவில்லையோ என்னவோ, வாட்ஸ்அப் கோடி கட்டிப் பறக்கிறது.



புதிய அப்டேட்டுகள்


அதற்கேற்றாற்போல் அவர்களும் புதிய புதிய அப்டேட்டுக்களை கொடுத்து வாட்ஸ்அப் உபயோகத்தை பயனர்களுக்கு எவ்வளவு இலகுவாக்கி கொடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சித்து வருகின்றனர். அதனால் குறைந்தது மாதம் ஒருமுறையாவது ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வழங்கி விடும். இல்லையென்றால் புதிய எமோஜிக்கலாவது வந்திறங்கும். தற்போது அதே போல அதிர வைக்கும் அப்டேட்டுடன் வந்துள்ளது வாட்ஸ்அப்.


தொடர்புடைய செய்திகள்: கட்டிப்பிடி வைத்தியத்தில் கல்லா கட்டும் நபர்! ஒரு மணி நேரத்துக்கு ரூ.7 ஆயிரம்! குவியும் மக்கள்


வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ்


ஏற்கனவே புகைப்படம், வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ள நிலையில் குரல்பதிவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஸ்டேட்டஸ்-ற்கு பெயர் 'வாய்ஸ் ஸ்டேட்டஸ்' என்று வைத்துள்ளார்கள். மற்றபடி எழுத்து, புகைப்படம், விடியோ ஸ்டேட்டஸ் வைப்பது போலவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனாகவே, நாம் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காட்டுவது போன்ற வசதியுடன் வருகிறது. வாய்ஸ் நோட் விரும்பிகளின் இடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த அப்டேட் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.



வருங்கால அப்டேட்டுகள்


மெஸேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும் எல்லா எமோஜிகளை பயன்படுத்தியும் மெஸேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ள 6 எமோஜிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆன்லைனில் இருப்பதை மறைக்கும் அப்டேட்டும் விரைவில் வெளிவருமென செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வசதி முதலில் ஐஒஎஸ் பயனர்களுக்குதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.