வாட்ஸ் அப் செயலியில் ’சாட் மெமரி’ என்ற வசதி விரைவில் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. 


மெட்டா நிறுவனம் தனது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வபோது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் உள்ளது போலவே வாட்ஸ் அப் செயலியிலும் சில வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. இதற்கு அடுத்து மெட்டா நிறுவனம் சாட்பாக்ஸ் உருவாக்கும் செய்யும் பணிகலை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பழைய சாட் உரையாட்கள் விவரங்களை சாட்பாக்ஸ் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


WABetainfo-வில் வெளியாகியுள்ள தகவலின் படி, மெட்டா ஏ.ஐ. சாட் பாக்ஸில் உள்ள உரையாட்களை மானிட்டர் செய்யும். அதில் உங்களுக்கு தேவையானதை கேட்டால் அது தேடி தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருவரின் பிறந்தாள், ஏதேனும் முக்கியமான நாட்களை நினைவு கூர்தல் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பர்சனல் அசிஸ்டண்ட்:


புதிதாக வரவிருக்கும் அப்டேட் படி, உங்களுக்கு பிடித்த புத்தகங்கள், ஹெல்த் சார்ந்த விசயங்கள் ஆகியவற்றை பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு அவ்வபோது வழங்கும் வசதியும் வர இருக்கிறது.


தனிப்பட்ட நபரின் தகவல் உரிமை பற்றிய அச்சம் எழுந்தால், அதை வாட்ஸ் அப் பயனர்கள் நிர்வகிக்க முடியும். ஆம். செட்டிங்ஸில் அதற்கேற்ற ஆப்சன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தயாரிப்பில் உள்ளதாகவும் எப்போது வெளியாகும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. 


ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் புதிய வர்சனில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. 
வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன்  Background மாற்றிகொள்ள முடியும். இப்போது இந்த வசதி வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி டீம்ஸ் (Teams), கூகுள் மீட் (Google Meet) ஆகிய ப்ளாட்ஃபாம்களில் இந்த வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த அப்டேட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background  மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில்  “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.