Whatsapp Feature: வாட்ஸ் அப்பில் வெப்பில் இனி க்யூ ஆர் கோட் இல்லாமலே Login செய்வதற்கான புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது...
வாட்ஸ் அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய வசதி
அந்த வரிசையில், தற்போது மெட்டா நிறுவனம் புதிய அப்பேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் வெப்பில் இனி க்யூ ஆர் கோட் இல்லாமலே Login செய்வதற்கான புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை வாட்ஸ் அப் கியூ ஆர் கோட் மூலம் செல்போனில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ் அப்பை இணைக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இனிமே அப்படி சிரமப்படத் தேவையில்லை.
அதாவது, வாட்ஸ் அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண் மூலமாக எளிதாக லின்க் செய்துவிட முடியும். இந்த அம்சம் செல்போனில் கேமரா சரியாக வேலை பார்க்காத பயனர்களுக்கு இந்த அம்சம் உதவும்.
எதிர்காலத்தில் லிங்க் செய்யக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க பெற, விரையில் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து வரும் அப்டேட்:
இதனை தொடர்ந்து, வாட்ஸ் அப்பில் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதியை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, Standard Qulaity, HD Quality என்ற இரண்டு ஆப்ஷனை அறிமுக செய்யவுள்ளது. பொதுவாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது. அதனால் Document ஆப்ஷனை பயன்படுத்தி தான் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி வருகிறோம்.
இதனை பயனர்களுக்கு எளிதாக்கும் வகையில், Standard Qulaity, HD Quality ஆப்ஷன் மூலம் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க