ஐபோனின் iMessage ஐ விட வாட்ஸ்அப் மிகவும் பாதுகாப்பானது என மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மெட்டா நிறுவனத்திற்கு கீழே இயங்கி வருகின்றன. இதற்கெல்லாம் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க். இவர் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் லேட்டஸ் தொழில்நுட்பம் குறித்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆப்பிளின் பிரபலமான iMessage சேவையை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் அவர் சமீபத்தில் ஷேர் செய்த பதிவில் “ iMessage ஐ விட WhatsApp மிகவும் பாதுகாப்பானது, குழு அரட்டைகள் உட்பட ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் வேலை செய்யும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இருக்கிறது. வாட்ஸ்அப் மூலம் நீங்கள் ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் அனைத்து புதிய அரட்டைகளையும் மறைந்துவிடும்படி செய்யலாம் . மேலும் கடந்த ஆண்டு நாங்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட காப்புப்பிரதிகளையும் அறிமுகப்படுத்தினோம். இவை அனைத்தும் iMessage இல் இன்னும் இல்லை.” என நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் iMessage என்பது அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒன்று . குறிப்பாக பள்ளி , கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களை தங்கள் வசப்படுத்தவே மார்க் இப்படியான இரு செய்தியை பதிவிட்டிருப்பதாக சில பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. மெட்டா ஆப்பிளை விமர்சிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் 2021 இல் ஆப்பிள் அதன் ‘ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பரன்சி’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. மூக ஊடக நிறுவனங்கள் பிற பயன்பாடுகள் அல்லது இணையதளங்களில் பயனரின் தரவைக் கண்காணிக்க முடியாது என்பதை இந்த அம்சம் உறுதி செய்கிறது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக 2022 இல் மட்டும் ஃபேஸ்புக்கிற்கு $22 பில்லியன் செல்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பயன்பாடுகளை திருடக்கூடாது என ஆப்பிள் நிறுவனம் மெட்டா நிறுவனத்தை நேரடியாகவே விமர்சனம் செய்ததால் அதனை மார்க் தற்போது வஞ்சம் வைத்து பழி தீர்க்கிறார் போலும் , பயனாளர்களின் தனியுரிமைக்கு எவ்வித குந்தகமும் வரக்கூடாது என்பதில் ஆப்பிள் ஆரம்பத்திலிருந்தே தீர்க்கமாக இருக்கிறது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் இருப்பது போன்ற எண்ட்- எண்ட் எண்கிரிப்ஷன் ஐ-மெசேஜில் இல்லை என்றாலும் கூட , அது ஆப்பிள் தயாரிப்பான ஃபேஸ்டைமில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் சிலர் “ மார்க் பயனாளர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பற்றி நீங்கள் பேசலாமா ? “ என சில கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.