செல்ஃபியை ஸ்டிக்கராக மாற்றும் வசதி அறிமுகம் - மெட்டா கொடுத்த அப்டேட்!

WhatsApp New Feature: வாட்ஸ் அப்பில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட்கள் பற்றி காணலாம்.

Continues below advertisement

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. தொழில்நுப்ட வசதிகளை அவ்வபோது வழங்கி வருகிறது. புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

Continues below advertisement

தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.

அப்டேட் என்ன?

வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்றவாறு மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. இம்முறை விசுவல் எஃபக்ட்ஸ், செலஃபி ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. 

 வாட்ஸ் அப் ஃபோட்டோ மற்றும் வீடியோவில் 30 'Background' ஃபில்டர் வகைகளை அறிமுகம் செய்துள்ளது. வீடியோ அழைப்புகளில் ‘Backgraound' மாற்றிக்கொள்ளலாம். ஸ்நாப்சாட் செயலில் உள்ள போன்ற வசதிகளை இப்போது அறிமுகம் செய்துள்ளது. 

செல்ஃபி ஸ்டிக்கர்:

வாட்ஸ் அப் கேமராவில் செல்ஃபி எடுத்து, அதை ஸ்டிக்கராக மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கேமராவில் உள்ள ‘  Sticker’ என்பதை க்ளிக் செய்தால் செஃல்பி ஸ்டிக்கராக மாறிவிடும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்லது. ஐஃபோன் பயனபர்களுக்கு விரைவில் வெளியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் உரையாடலில் ஸ்டிக்கர் அதிகம் பயன்படுத்துபவர்கள் எனில், உங்கள் நண்பர்களுக்கும் பிடித்த ஸ்டிக்கர்களை இனி அவர்களுடன் பகிந்துகொள்ளலாம்.’sticker pack' ஐ அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது. 

உரையாடலில் 'Quicker reactions’ வசதி ஏற்கனவே இருந்ததுதான். அப்படியிருக்கையில், இப்போது மெசேஜை ‘double tap ' செய்தால் ரியாக்ட் செய்ய முடியும். 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola