கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு முதல் வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐடி நிறுவனங்கள் தொடங்கி சாதாரண நிறுவனங்கள் வரை வீட்டிலிருந்து பணிபுரிவதை வாடிக்கையாக்கிவிட்டனர். இதன் காரணமாக நேரத்திற்கு பணிக்கு செல்லவேண்டும் என மன அழுத்தம் பணியாளர்களுக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களுக்கு மின்சாரம், நெட் போன்ற இதர செலவு இல்லை என்பதாலும் வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இருந்தபோதும் எந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். எனவே இந்த சூழலில் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு தேவையான செயலிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.


1. குழு ஒத்துழைப்பு மென்பொருள் (Team collaboration software)


குழு ஒது்துழைப்பு மென்பொருள் என்பது விரைவான மற்றும் நம்பகமான முறையில் தனது குழுக்களை ( Team) தொடர்பு கொள்ள உதவுகிறது. மேலும் இதன் மூலம் முக்கியமான கோப்புகளைப் பகிரவும், ஆவணங்களை செயலாக்கவும் மற்றும் நிலை புதுப்பிப்புகளைப் பகிரவும் இந்த மென்பொருள் உதவுகிறது. இந்த செயலிகளில் (APPS) ஒன்று ஒயிட் போர்டு மென்பொருள் ( White board software) என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலின் மூலம் வடிவமைப்புகளை வரைதல், சிறுகுறிப்பு மற்றும் தனிப்பயனாக்குதல் மூலம் தொலைதூரத்தில்  இருந்து பணிபுரிபவர்களுக்கு ஒத்துழைக்கும் வடிவமைப்பு குழுக்களுக்கு உதவுகிறது.



2. வீடியோ கான்பரன்சிங் மென்பொருள் (Video conferencing software)


வீட்டிலிருந்து வேலை செய்யும்போது குழு ஒத்துழைப்புகளைப்பேணுவது மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு சிறந்த வழியாக வீடியோ கான்பிரசிங் மென்பொருளை பயன்படுத்தலாம். மேலும் இதன் மூலம் நாம் நம்முடைய குழுக்களுடன் எத்தனை மணிக்கு மீட்டிங் வைத்துள்ளோம் என நேரம், நாள் போன்றவற்றை குறித்துக்கொள்ள பயன்படுகிறது. இதோடு நாம் திரையில் என்ன பேசுகிறோம் என்பதையும் பதிவு வசதியும் இதில் உள்ளது. பொதுவாக இந்த வீடியோ கான்பரன்சிங் மென்பொருள் உபயோகத்திற்கு Zoom, Skype,Microsoft Teams.Cisco Webex Meetings,GoToMeeting,BlueJeans Meetings,Google Hangouts Meet,Jabber,join.me,Dialpad UberConference போன்ற செயலிகள் பயன்படுத்தலாம்.


3. நேர கண்காணிப்பு மென்பொருள் ( Time tracking software)


வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் சவால்களில் ஒன்று, வேலை முடிந்துவிட்டது மற்றும் உற்பத்தித்திறன் வீழ்ச்சியடையவில்லை என்பதை தங்களுடைய முதலாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அறிய விரும்புகிறார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் பணிகளின் தகவல்களை சரியான நேரத்தில் கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக நேர கண்காணிப்பு கருவியைப் பயன்படுத்துவது வணிகங்களுக்கு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அளவிடுவதற்கான சிறந்த வழியாகும், ஆனால் ஊழியர்களை அவர்களின் பணிக்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பணியாளர்கள் தரப்பில், freelancer மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு சம்பளப்பட்டியல் மற்றும் விலைப்பட்டியல்களை அனுப்பும் போது நேரத்தை கண்காணிக்கும் மென்பொருள் முக்கியமானதாக இருக்கும். எனவே பெரும்பாலும் இதற்காக QuickBooks Time, Paylocity,monday.com, Paychex Flex, Toggl Track,Workday HCM,UKG ,Workforce Central,Harvest, Wrike,UKG Pro போன்ற செயலிகள் இதற்கு பெரும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.



4. Cloud content collaboration software


வீட்டிலிருந்து வேலைப்பார்க்கும் போது, வீடியோ கான்பிரசிங் மட்டுமில்லாது கோப்புகளை சரியாக அனுப்புவதும்,பாதுகாப்பாக வைப்பதும் முக்கியமான ஒன்று. இந்த மென்பொருளை பயன்படுத்தி தான் நம்முடைய பங்குதாரர்கள் தங்களின் பணிகளை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதோடு, கோப்புகளில் என்ன மாற்றம் செய்ய வேண்டும், யார் செய்துள்ளார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ள உதவியாக உள்ளது. இதற்காக தற்போது Microsoft OneDrive,Dropbox, Business, Google Drive, Box,Dropbox Professional,Citrix ShareFile,iCloud, Egnyte, Amazon Drive போன்ற செயலிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.


5. இறுதிப்புள்ளி பாதுகாப்பு மென்பொருள் (End point protection software)


முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஸ்கேன்களை ஐடி குழுக்கள் நிகழ்நேரத்தில் கொண்டு செல்ல முடியும், ஒவ்வொரு குழு உறுப்பினரும், அவர்கள் உலகில் எங்கிருந்தாலும், முற்றிலும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறார்கள். இது போன்ற மென்பொருள்கள் தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், பணியாளர்கள் தங்கள் பணிகளை வீட்டில் இருந்தே எளிமையாக்கி கொள்ள முடிகிறது.