நீங்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை எப்படி செலுத்துகிறீர்கள்? பணமாகவா அல்லது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற மொபைல்போன் செயலிகளின் வழியாகவா? ஸ்மார்ட்போன், இணையம் சார்ந்து புழங்கிக்கொண்டிருக்கும் நபர் என்றால் பெரும்பான்மையான நேரங்களில் நீங்கள் இத்தகைய செயலிகளின் வழியே பரிவர்த்தனை செய்பவராக இருக்கக்கூடும். ஆர்பிஐ-யின் வழிகாட்டுதலின் கீழ் என்பிசிஐ அந்தப் பணியை மேற்கொண்டது. அப்படி உருவானதுதான் யுபிஐ.


ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ(Unified Payment Interface) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பானது இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒரே குடைக்குள் இணைத்து அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. மொபைல்போன் செயலி வழியே ஒரு வங்கியிலிருந்து எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது. யுபிஐ பரிவர்த்தனைகளை எளிமையின் காரணமாக பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. GooglePay, Phonepe, Paytm, AmazonPay போன்ற யுபிஐ செயலிகள், தற்போது ஆன்லைன் பேமெண்ட் துறையில் ஆதிக்கம் செலுத்துக்கின்றன. இதில் புரியாத அளவில் ஹேக் போன்ற பிரச்சனைகள் வருவதை விட எளிதாக ஃபேக் பேமெண்ட், கியூஆர் கோடு மாற்றுதல் போன்ற சிறிய நிலை கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. இப்படி எல்லா வகையிலும், பாதுகாப்பான யுபிஐ செயல்பாட்டை மேற்கொள்வதற்கு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று உள்ளன, அவற்றை பார்க்கலாம்.



  1. தெரியாத ஐடி மற்றும் எண்கள் குறித்து பாதுகாப்பாக இருங்கள்:


உங்களுக்கு அறிமுகமில்லாத எண்ணையோ அல்லது நீங்கள் சந்தேகப்படும் ஐடியோ கண்டால், அதுபோன்ற தொடர்புகளிலிருந்தும் விலகி இருப்பது நல்லது. வெளிப்படையாக பகிரப்படும் தொலைபேசி எண்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணமாக, உணவு, தேநீர், குளிர்பான விற்பனை நிலையங்களின் தொலைபேசி எண்கள். பரிவர்த்தனைக்கு செல்லும் முன் நபரின் அடையாளத்தை இருமுறை சரிபார்ப்பது சிறந்தது.




  1. பணத்தைப் பெறுவதற்கு ஒருபோதும் யுபிஐ பின் கொடுக்கக்கூடாது:


யூபிஐ மோசடி பற்றிய அடிக்கடி வரும் புகார்களில் ஒன்று இது. பணத்தைப் பெறுவதற்கு வங்கி ஒருபோதும் யுபிஐ பின்னைக் கேட்காது. மோசடி செய்பவர்கள் பணம் அனுப்புவதாக உறுதியளித்து, வாடிக்கையாளர்களை அவசரப்படுத்தி பணத்தை திருடும் வாய்ப்பு உள்ளது. பின் நம்பரை உள்ளிட்டால் பணம் வந்துவிடும் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். இவர்கள் விரிக்கும் வலையில் வீழ்ந்தால் பணத்தை இழக்க நேரிடும்.



  1. ரேண்டம் பேமெண்ட் கோரிக்கைகள்:


யுபிஐ மூலம் பணம் செலுத்தவேண்டிய கோரிக்கைகள் பலதரப்பட்ட ஐடிக்களில் இருந்து வரலாம். ஆனால் உண்மையிலேயே அது நாம் கொடுக்க வேண்டிய ஐடி தானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மறுமுனையில் இருப்பவர் மோசடி செய்பவர் அல்ல என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருந்தால் மட்டுமே பரிவர்த்தனையைத் தொடரவும். நீங்கள் 'பே' அல்லது 'டிக்ளைன்' ஆகோய இரு ஆப்ஷன்களை பெறுவீர்கள். சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் 'டிக்ளைன்' செய்யது விட வேண்டும். எதையும் சரி பார்க்காமல், 'பே' ஆப்ஷனை கிளிக் செய்து பணத்தை இழந்தால், ஒருபோதும் அதனை மீட்க முடியாது.




  1. போலி UPI ஆப்கள்:


ஏடிஎம் கார்டு இயந்திரங்களின் காலத்தில், கார்டு ஸ்கிம்மிங் நிகழ்வுகள் நிறைய இருந்தன. உண்மையான இயந்திரத்தின் மீது, பதிக்கப்பட்ட போலி இயந்திரம் மூலம் ஏடிஎம் கார்டின் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறைக்கு பெயர்தான் ஸ்கிம்மிங். இதேபோல், போலியான UPI பயன்பாடுகள், பணம் செலுத்துதல் அல்லது UPI மூலம் பெறுதல் போன்ற சாக்குப்போக்கின் கீழ் உங்கள் விவரங்களைப் பறிக்க முயல்கின்றனர். இத்தகைய பயன்பாடுகள் வழக்கமாக அசல் வங்கி பயன்பாட்டைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை பதிவிறக்குவதற்கு எளிதாகக் கிடைக்கும். நீங்கள் தற்செயலாக போலி செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவினால், அது உங்கள் முக்கியமான தரவை ஹேக்கர்களுக்கு பகிர்ந்து கொள்ளும். மோடி பீம், பீம் பேமென்ட்-யுபிஐ கையேடு, பீம் மோடி ஆப், பிஹெச்ஐஎம் பேங்கிங் கையேடு போன்ற போலியான செயலிகளில் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிட்டி வங்கி ஆலோசனை கூறியுள்ளது.



  1. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்:



  • உங்கள் யுபிஐ பின்னை ஒருபோதும் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது.

  • ஆண்டி வைரஸ் மற்றும் பயோமெட்ரிக் மென்பொருளை நிறுவி வைத்திருங்கள்.

  • தெரியாத ஐடிக்களில் வரும் மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம்.

  • உங்கள் விவரங்களை உங்கள் வங்கியுடன் இணைக்க வேண்டும்.

  • நீங்கள் நம்பும் பாதுகாப்பான வைஃபை இணைப்புகளை மட்டும் பயன்படுத்துங்கள்

  • உங்கள் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கைகளை கண்காணித்து, உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய நடத்தை ஏதேனும் உள்ளதா எனக் கண்காணிக்கவும்.

  • அப்படி ஏதாவது அசாதாரணமான பரிவர்த்தனையைக் கண்டால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.